முருங்கன்
Jump to navigation
Jump to search
முருங்கன் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் ஏ-14 நெடுஞ்சாலையை முருங்கன் சிலாவத்துறை வீதி சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது. மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் முருங்கனுக்கு ஊடாகவே செல்வதுடன், அங்கே தொடர்வண்டி நிலையம் ஒன்றும் உள்ளது. முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,[1] ஒரு பிரதேச வைத்தியசாலையும்[2] உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய அஞ்சல் நிலையம் ஒன்றும் உள்ளது.[3]
குறிப்புக்கள்
- ↑ "பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-27.
- ↑ "வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-27.
- ↑ "அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-27.