முருகேஷ் - திரைப்பட இயக்குனர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முருகேஷ் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019 இல் வெளியான "சகா" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள சுந்தம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். கந்தர்வகோட்டையில் பள்ளி படிப்பை தொடங்கிய இவர் சிறுவயது முதலே தமிழ் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது பேட்டியில் இந்தியன், பம்பாய் போன்ற தமிழ் திரைப்படங்களே என்னை திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதாகக் கூறியுள்ளார்.
இவரின் முதல் படைப்பான சகா திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் நட்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளதே இதற்கு காரணம். இத்திரைப்படம் செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சபீரின் இசையமைப்பில், சரண் மற்றும் கோலிசோடா நாயகர்களின் நடிப்பில் வெளிவந்தது.