முரளி பெருநெல்லி
முரளி பெருநெல்லி | |
|---|---|
![]() | |
| கேரள சட்டமன்றம் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2016 | |
| பின்னவர் | பதவியில் இருப்பவர் |
| தொகுதி | மணலூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 சூன் 1950 ஊரகம் |
| தேசியம் | இந்தியன் |
முரளி ராகவன் பெருநெல்லி (Murali Raghavan Perunelli)இவர் இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதிநிதியாக மணலூர் தொகுதியில் இருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 19 சூன் 1950 அன்று திருச்சூரில் உள்ள ஊரகத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் டி. ராகவன் நாயர், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பி. மாலதி அம்மா.[2] இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டக் குழு, திருச்சூர் மற்றும் கேரள விவசாயி சங்கத்தின் செயற்குழுவின் செயலக உறுப்பினராக உள்ளார்.[2] இவர் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் ஒரு விவசாய நிபுணர். முன்பு கே.எல்.ஏ. 2006 இல், இவர் ஸ்ரீமதி மல்லிகாவை மணந்தார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[3]
முல்லச்சேரி கிராம பஞ்சாயத்து துணைத் தலைவராகவும், அன்னகர சேவை சங்கத் தலைவராகவும், வியூர் மத்திய சிறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும்,ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும், திருச்சூர் நட்டுத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், CPI (M) மணலூர் பகுதிக் குழுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Manalur". ManoramaOnline. http://localnews.manoramaonline.com/thrissur/mla-quarters/manalur.html. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ 2.0 2.1 "Niyamasabha" (PDF). Government of Kerala. Retrieved 14 சனவரி 2018.
- ↑ "Kerala State Legislative Assembly". www.niyamasabha.nic.in. Retrieved 24 பெப்பிரவரி 2022.
- ↑ "Fourteenth Kerala Legislative Assembly". Journal of Fourteenth Kerala Legislative Assembly: 170–171. http://www.niyamasabha.org/codes/14kla/Members-Eng/74%20Murali%20Perunelly.pdf.
