முரஞ்சியூர் முடிநாகராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முரஞ்சியூர் முடிநாகராயர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 2[1] எண்ணில் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை நேரில் கண்டு வாழ்த்தியுள்ளார்.

புலவர் பெயர் விளக்கம்

ஐம்பரும் பூதத்தின் பண்புகளை உடையவன்

  1. நிலம் - மண்ணின் திணிவு பெற்றது - நிலம் போலப் பகைவரையும் பொறுத்துக்கொள்ளக்கூடியவன்.
  2. விசும்பு - நிலத்தை ஏந்திக்கொண்டுள்ளது - சூழும்(ஆராயும்) திறத்தில இந்த ஆகாயம் போல் விரிந்தவன்.
  3. வளி - விசும்பைத் தவழ்ந்துகொண்டிருக்கிறது - இந்தக் காற்றைப் போல வலிமை உள்ளவன்.
  4. தீ - வளிக்குள் பொருந்திக் கிடக்கிறது - இந்தத் தீயைப்போலப் பகைவரை அழிக்கக்கூடியவன்.
  5. நீர் - தீயோடு முரண்பட்டது - தண்ணீரைப் போலத் தண்ணளி கொண்டவன்

அறிவியல் கண்ணோட்டம்

விசும்பும் விசும்பு
  • விசும்பு = கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல், அடக்க முடியாமல் விசும்பிக்கொண்டிருப்பது.

'நிலன் ஏந்திய விசும்பு' என்பது பாடலில் உள்ள தொடர். நிலம் விசும்பை ஏந்திக்கொண்டிருக்கிறது, நிலத்தை விசும்பு ஏந்திக்கொண்டிருக்கிறது என்று இத்தொடருக்கு இரு வகையில் பொருள் காணமுடியும். நிலத்தை விசும்பு ஏந்திக்கொண்டிருக்கிறது என்று கொண்டால் the earth is floating in the space என்பது விளங்கும்.

நாட்டின் பரப்பளவு

அவன் கடலில் தோன்றும் ஞாயிறு அவன் கடலிலேயே மறையும் என்று இந்தச் சேர மன்னனின் நாட்டுப் பரப்பு கூறப்படுகிறது. இது இப்போதுள்ள குமரி மாவட்டப் பகுதி அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

வானவரம்பன்

வானவரம்பன் என்று போற்றப்படுவது நீயோ பெரும! என்று புலவர் இவனை வினவுகிறார். வானவரம்பன் என்னும் தொடரிலுள்ள வானம் என்பது மழையைக் குறிக்கும். (ஒப்புநோக்குக - திருக்குறள் வான்சிறப்பு) மழையைத் தன் வள்ளண்மைக்கு எல்லையாகக் கொண்டவன் என்பது இதன் பொருள். வானம் போல ஐவருக்கும் நூற்றுவருக்கும் சோறு வழங்கிய இவனது வள்ளண்மையை இங்கு எண்ணிக்கொள்ள வேண்டும்.

ஐவர்-ஈரைம்பதின்மர்-போரில்-பெருஞ்சோறு

காலம்

வாழ்த்து

இமயமலை போலவும், பொதியமலை போலவும், சுற்றம் சூழப் புகழுடன் வாழவேண்டும் என்று புலவர் இவனை வாழ்த்துகிறார்.

கறந்த பால் புளிக்காது. பட்டப்பகலில் இருள் இருக்காது. நால்வேத நெறி திரியாது. புளித்தாலும், இருண்டாலும், திரிந்தாலும் நீ நின் நிலையில் திரியாமல் வாழி என்கிறார்.

இமயத்திலும் பொதியத்திலும் அந்தணர் அந்தி வந்ததும் தீ வளர்க்கும் கடமையை மேற்கொள்வார்களாம். அந்தத் தீ வெளிச்சத்தில் நவ்வி இனத்து மான்கணம் குளிர்காயுமாம்.

வெளி இணைப்பு