முயல் தீவு
| உள்ளூர் பெயர்: முசல் தீவு | |
|---|---|
| புவியியல் | |
| ஆள்கூறுகள் | 9°12′N 79°05′E / 9.20°N 79.08°E |
| பரப்பளவு | 1.29 km2 (0.50 sq mi) |
| நிர்வாகம் | |
India | |
முசல் தீவு எனப்படும் முயல் தீவு (Hare Island) இந்தியாவில் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியின் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு.[1][2]
விளக்கம்
இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 125 கி.மீ தொலைவிலும், மண்டபம் பேரூராட்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[3] 1.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முயல் தீவு மன்னார் வளைகுடாவின் மிகப்பெரிய தீவாகும். இங்கு ஒரு சிறிய கிறித்தவ தேவாலயம் உண்டு. [4][5]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2013-01-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-01-01.
- ↑ Musal Tivu / Muyal Tivu / Hare Island
- ↑ http://staging.dinamani.com/edition_thirunelveli/tuticorin/article1041426.ece[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-26. Retrieved 2013-01-01.