முதுவெங்கண்ணனார்
Jump to navigation
Jump to search
முதுவெங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. நற்றிணை 232 அந்தப் பாடல்.
பாடல் தரும் செய்தி
இந்தப் பாடல் குறிஞ்சித்திணை பற்றியது. தலைவன் தலைவியை நாடிப் பகலில் வருகிறான். அவனை இரவு வரையில் காத்திருந்து பெறுமாறு தோழி சொல்லும் செய்தி இதில் உள்ளது.
- தாமம் நல்கு
தாமம் என்னும் சொல் மாலையைக் குறிக்கும் வகையில் இப் பாடலில் கையாளப்பட்டுள்ளது. யானைக் கூட்டம் குளத்தில் குளித்துவிட்டு அதன் அருகிலிருந்த வாழைக் குலைகளைத் தின்று தெவிட்டியபோது அருகிலிருந்த சிறுகுடி மக்கள் அலற அலற அங்குப் பழுத்திருந்த பலாப்பழங்களைப் பறித்துத் தின்னுமாம். தலைவன் அப்படிப்பட்ட இடத்தில் வாழும் மலைநாடனாம்.
அவன் இரவு வரையில் காத்திருந்து தலைவியைப் பெறவேண்டும். அன்றியும் அவளுக்கு மாலையிட்டு உரிமையுடன் பெறவேண்டும் - என்று தோழி தலைவனிடம் வேண்டுகிறாள்.