முதுகுருகு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முதுகுருகு என்னும் நூல் பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,

ஒப்புநோக்கப் பாடல்

1

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய். [1]

2

அடையல், குருகே! அடையல் எம் கானல்,
அடையல், குருகே! அடையல் எம் கானல்,
உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்;
அடையல், குருகே! அடையல் எம் கானல். [2]

ஒப்பு நோக்குக

அடிக்குறிப்பு

  1. கோவலன் பாடிய கானல் வரிப் பாடல் - சிலப்பதிகாரம் கானல்வரி
  2. மாதவி பாடிய கானல் வரிப் பாடல் - சிலப்பதிகாரம் கானல்வரி
"https://tamilar.wiki/index.php?title=முதுகுருகு&oldid=14093" இருந்து மீள்விக்கப்பட்டது