முதற்பொருள் (தொல்காப்பியம்)
Jump to navigation
Jump to search
உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே காலம் ஒருவகை முதற்பொருள். காலத்தை ஆண்டு நோக்கில் பார்ப்பது பெரும்பொழுது. தமிழர் பார்வையில் இது ஆறு பருவம். காலத்தை நாள் நோக்கில் பார்ப்பது சிறுபொழுது. தமிழர் பார்வையில் பகலில் 3 சிறுபொழுது. இரவில் 3 சிறுபொழுது. ஆக 6 சிறுபொழுது.
தொல்காப்பியர் காலத்தைப் பொழுது என்கிறார். கால மாற்றத்தைப் பொழுதின் (சூரியனின்) இயக்கத்தை அடிப்படையாக வைத்துத்தானே அளவிடுகிறோம்.
திணையும் நிலனும்
திணை | நிலன் |
---|---|
முல்லை | மாயோன் மேய காடுறை உலகம் (மேடுகாடு) |
குறிஞ்சி | சேயோன் மேய மைவரை உலகம் (மலைப்பகுதி) |
மருதம் | வேந்தன் மேய தீம்புனல் உலகம் (ஆறு பாயும் நன்செய் நிலம்) |
நெய்தல் | வருணன் மேய பெருமணல் உலகம் (கடலோர நிலம்) |
நடுவு நிலைத்திணை (பாலைத்திணை) | நிலப்பகுப்பு இல்லை |
திணைமயக்கம் நிகழும்போது நிலமயக்கம் இல்லை. கருப்பொருள் மயங்கும். உரிப்பொருள் மயங்காது.
திணையும் பொழுதும்
- தொல்காப்பியர் நிரல்
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
---|---|---|
முல்லை | கார்க்காலம் | மாலை |
குறிஞ்சி | கூதிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
மருதம் | - | வைகறை, விடியல் |
நெய்தல் | - | எற்பாடு |
நடுவு நிலைத்திணை (பாலைத்திணை) | பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் | நண்பகல் |