முட்டம் இரணியல் சாலை
முட்டம் சாலை இரணியல்
இரணியல் | |
---|---|
பொது இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 10 m (30 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,230 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN 74, TN 75 |
முட்டம் இரணியல் சாலை (Muttom road Eraniel) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் அருகே உள்ள ஓர் இடம் ஆகும்.[1]
புவியியல்
8.2°வடக்கு 77.3°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் முட்டம் இரணியல் சாலை அமைந்துள்ளது.[2] சராசரியாக கடல் மட்டத்திலிருந்து (32 அடி) உயரத்தில் திங்கள் நகருக்கு அருகில் உள்ளது.
முட்டம் இரணியல் சாலை ஒரு சிறிய குடியிருப்பு பகுதியாகும். இது சுமார் 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடக்கே தால்குளமும் கிழக்கில் வில்லுகுறியும் அமைந்துள்ளன. குளச்சல் துறைமுகத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து (திருவாங்கூர் தலைநகரம்) சுமார் 32 கி.மீ. தொலைவிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை அருகிலுள்ள ஒரு சுற்றுலாத்தளமாகும். 1745- ஆம் ஆண்டில் தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 72 கி.மீ. தொலைவில் உள்ளது. இரணியல் இரயில் நிலையம் இந்த நகரத்திற்கு உதவுகிறது. நாகர்கோவில், முட்டம், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய இடங்களிலிருந்து முட்டம் இரணியல் சாலைக்கு செல்லலாம். முட்டம் இரணியல் சாலை தெருக்களில், விளையாட்டு குழுக்கள், கோயில்கள், பள்ளிகள் போன்றவை உள்ளன.
மக்கள் தொகையியல்
2010 ஆம் ஆண்டிம் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 3,230 மக்கள் வசித்தனர்.,[3] இவர்களில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள் ஆவர். முட்டம் இரணியல் சாலையின் சராசரியான கல்வியறிவு விகிதம் 82% ஆகும். தேசிய சராசரிக் கல்வியறிவை விட (59.5%) இது அதிகமாக உள்ளது. இதில் ஆண் கல்வியறிவு 84% மற்றும் பெண் எழுத்தறிவு 80% ஆகும். இரணியல் மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்டோர் 9% ஆவர்.
மேற்கோள்கள்
- ↑ "தோட்டியோடு-திங்கள்நகர் சாலையை விரிவுபடுத்த அமைச்சரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2022/Mar/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3815662.html. பார்த்த நாள்: 20 June 2024.
- ↑ Falling Rain Genomics, Inc - Eraniel
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.