முக்குறுணி விநாயகர்
Jump to navigation
Jump to search
முக்குறுணி விநாயகர் மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.[1].ஒரு குறுணி என்பது 6 படி. இவ்விநாயகருக்கு 3 குறுணி, அதாவது 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தி நாளன்று இவ்விநாயகருக்குப் படைக்கப்படுகிறது. [2] [3] எனவே இவ்விநாயகருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
மதுரை மன்னரான திருமலை நாயக்கர், வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டும் போது, கண்டெடுக்கப்பட்ட இவ்விநாயகரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
முக்குறுணி விநாயகர் முன்புள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கரின் உருவமும், அவரது குடும்பத்தினரின் உருவங்களும் உள்ளன. [4]
மேற்கோள்கள்
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1270839.ece
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1270839.ece
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=34750
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-01-22.