முகேசு முகமது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முகேசு முகமது
முகேசு முகமது.jpg
முகேசு முகமது
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பி.ஏ.பீர் முகமது
பிறப்பு6 சூலை 1980 (1980-07-06) (அகவை 44)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)குரல் கலைஞர்
இசைத்துறையில்1995 – நடப்பு

முகேசு முகமது (ஆரம்பத்தில் முகேசு என்று அழைக்கப்பட்டார்) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.[1] இவர் மெல்லிசை, நாட்டுப்புற இசை, கானா பாடல்கள் என பல்துறை பாடகர் ஆவார்.[2]  பல்வேறு இந்திய மொழிகளில் 500இக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பல பக்திப் பாடல்களையும் பதிவு செய்துள்ளார். இவர் உலகெங்கிலும் உள்ள பல நேரடி இசைக் கச்சேரிகளில் பங்குபெற்றுப் பாடியவர். மேலும் இளையராஜாவின் இசைக் குழுக்களில் தொடர்ந்து பாடல்கள் பாடியுள்ளார். முகேசு முகமது அண்ணாத்த திரைப்படத்தில் "வா சாமி" உட்பட மிகவும் பிரபலமான வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.[3][4]

ஆரம்பகால வாழ்க்கை

முகேசு முகமது தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.[5] இவர் தனது பள்ளி நாட்களில் பாட்டுப் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றார். இவரது ஆசிரியர் இசைத் துறையிலும் திரைப்படத் துறையிலும் நுழைய அறிவுறுத்தி இவரின் எதிர்காலத்தை முன்னறிவித்தார். முகேசு முகமது சிறுவயதிலிருந்தே திரைப்படத் துறையில் ஆர்வமாக இருந்ததால், அதைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இசையாளரான இவருடைய தந்தை என். பி. அப்துல் காதர்[6] புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர்களான கே. பி. சுந்தராம்பாள்டி. ஆர். மகாலிங்கம்டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய சில கடினமான பாடல்களைப் பாடப் பயிற்சி அளித்ததுடன் இசையை முறையாகக் கற்கவும் ஊக்குவித்தார். முகேசு முகமது இசையாளரான தினகரனிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். தினகரன் இவருடைய பெயரை முகேசு என்று மாற்றினார்.[7]

பின்னணிப் பாடகராக

முகேசு முகமது தினகரனின் இசைக்குழுவில் பாடல்கள் பாடத் தொடங்கினார். தொடக்கத்தில் பல பிரபலமான தமிழ் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.[8] 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மெல்லிசைக் குழுக்களில் பாடிக்கொண்டிருந்தார். ஒரே நேரத்தில், முன்னணி தொலைக்காட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு இசைப் போட்டிகளில் இவர் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டில், ராஜ் தொலைக்காட்சி நடத்திய "ராஜ கீதம்" என்ற இசைப் போட்டிக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எம். எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் முன்னிலையில் விருதைப் பெற்றார்.[9] இந்த பாராட்டுகள் இவருக்கு தமிழ்த் திரையிசையில் பாடல்கள் பாடும் வாய்ப்பைக் கொடுத்தது.[10] 2004 இல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த கண்களால் கைது செய் என்ற தமிழ்த் திரைப்படத்தில் "தீக் குருவியை" பாடலுக்காக முகேசு முகமது முதன்முறையாக பின்னணி பாடினார்.[11]  இளையராஜாசிறீகாந்து தேவாபரத்வாஜ்தேவி ஸ்ரீ பிரசாத்டி. இமான்ஹாரிஸ் ஜெயராஜ்சிற்பிகார்த்திக் ராஜாகண்ணன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உட்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.[12][13] 1964இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலை இவர் பங்குபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். [14][15][16]

மேற்கோள்கள்

  1. "Our song is a street-style fusion single for the youth, says musician Ram Kumar". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/our-song-is-a-street-style-fusion-single-for-the-youth-says-musician-ram-kumar/articleshow/86292879.cms. 
  2. "Mukesh Exclusive Interview". Youtube. Mojo Projects. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  3. "How Imman cracked the Rajinikanth intro song for ‘Annaatthe’". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/annaatthee-will-bring-back-the-rajinikanth-of-the-90s-says-imman/article37172809.ece. 
  4. "Singer Thirumoorthi thanks Imman for opportunity to sing in Annaatthe". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/singer-thirumoorthi-thanks-imman-for-opportunity-to-sing-in-annaatthe/articleshow/87278053.cms. 
  5. "அடங்க மறு பாடகர் முகேஷ்". Kungumam. Kungumam. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  6. "Vanakkam Tamizha with Singer Mukesh and Actor Shyam". SUN TV. SUN TV. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  7. "Interview with Singer Mukesh". GR Cinetalks (Youtube). பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  8. "எந்த மேடைக்கு போனாலும் கண்டிப்பா இந்த பாட்ட பாடனும்னு அப்பா சொல்லிருக்காரு". Youtube. JAYA TV. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  9. "Interview with Singer Mukesh". GR Cinetalks (Youtube). பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  10. "An interview with Singer Mukesh-P01". SBS Tamil. SBS Tamil Radio Australia. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  11. "Singer Mukesh sings his first song composed by A R Rahman". Youtube. News7 Tamil. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  12. "Live Interview with Mukesh Mohamed". Youtube. Retro Films. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  13. "Singer Mukesh". Youtube. GR Cinetalks. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  14. "KARNAN - Ullathil Nalla Ullam song by singer Mukesh mesmerized Voice". Youtube. DDS MEDIA. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  15. ரோகிணி, ஆர் ஜே. "எங்க பாட்ட கேட்டு கரோனா பயப்படணும் - பாடகர் முகேஷ் உடன் லாக்டவுன் கலாட்டா". Asiaville (Tamil ). பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  16. "Mukesh nice song ullathil nalla ullam". Panchalingam Arudselvan (Youtube). பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முகேசு_முகமது&oldid=9029" இருந்து மீள்விக்கப்பட்டது