மீனாட்சி கோபிநாத்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மீனாட்சி கோபிநாத் |
---|---|
பிறந்தஇடம் | இந்தியா |
பணி | கல்வியாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்மசிறீ |
துணைவர் | ராஜீவ் மெகரோத்ரா |
மீனாட்சி கோபிநாத் (Meenakshi Gopinath) ஓர் இந்தியக் கல்வியாளர், அரசியல் விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் புது தில்லி சீமாட்டி ஸ்ரீ ராம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆவார். [1] இவர் தெற்காசியாவின் பெண்கள் மத்தியில் அமைதி மற்றும் சமூக-அரசியல் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசு சாரா அமைப்பான பாதுகாப்பு மோதல் மேலாண்மை மற்றும் அமைதிக்கான (WISCOMP) பெண்களின் நிறுவனர் மற்றும் தற்போதைய இயக்குநராகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு எனும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் பெண்மணியும் ஆவார். [2] </ref> இவர் லோக்பால் தேர்வுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார், இது இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அதிகார வரம்பைக் கொண்ட ஒரு சட்ட அமைப்பாகும். [3] இந்தியக் கல்வித் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில் பத்மசிறீ எனும் நான்காவது உயரிய குடிமை விருதை வழங்கியது. [4] பெண்ணிய சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அரசியலின் முன்னணி இதழான இன்டர்நேஷனல் ஃபெமினிஸ்ட் ஜர்னல் ஆஃப் பாலிடிக்ஸ் இன் இணை ஆசிரியர் ஆவார். [5]
ஆரம்பகால வாழ்க்கை
புது தில்லியில் உள்ள சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பினைப் படித்தார்[6]. அதே கல்வி நிறுவனத்தில் பல வருடங்கள் முதல்வராக இருந்தார். [7] மாசசூசெட்சு ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற இந்தியா திரும்பினார். [8] ஃபுல்பிரைட் ஆய்வுதவித் தொகையினைப் பெற்று, பின்னர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்தார். [9] சவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். [10] மேலும் 1988 ஆம் ஆண்டு முதல் [11] 2014 இல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை சிறீராம் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். [12]
விருதுகளும் கௌரவங்களும்
2007 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் கோபிநாத்துக்கு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது [4] கல்வியில் சிறந்து விளங்கியதற்காக, அதே ஆண்டு, கிம்ப்ரோ பிளாட்டினம் இசுடாண்டர்டு விருது பெற்றார். [13] 2008இல் சமூக நல்லிணக்கத்திற்கான 2008 செலிபிரேட்டிங் வுமன்ஹுட் தெற்காசிய பிராந்திய அங்கீகாரத்தை இவருக்கு வழங்கியது. [14] கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ராஜீவ் காந்தி விருது மற்றும் மகிளா சிரோமணி விருது மற்றும் டெல்லி சிட்டிசன் ஃபோரம் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். [15]
சான்றுகள்
- ↑ "Dr Meenakshi Gopinath on Aberystwyth University". Aberystwyth University. 2016. https://www.aber.ac.uk/en/media/departmental/interpol/ddmi/dr_meenakshi_gopinath_biography.pdf.
- ↑ "Our Story". Women in Security Conflict Management and Peace. 2016. http://wiscomp.org/sample-page/our-story/.
- ↑ "Fali Nariman refuses to join 'farcical' Lokpal selection panel". First Post. 27 February 2014. http://www.firstpost.com/india/fali-nariman-refuses-to-join-farcical-lokpal-selection-panel-1410613.html.
- ↑ 4.0 4.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016. http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "Home". http://ifjpglobal.org/.
- ↑ "India's Best Arts Colleges 2014". India Today. 2016. http://indiatoday.intoday.in/bestcolleges/2014/ranks.jsp.
- ↑ "The Legend Lives On- the Retirement of Meenakshi Gopinath". DU Beat. 31 August 2014. http://dubeat.com/2014/08/legend-lives-retirement-meenakshi-gopinath/.
- ↑ Gopinath, Meenaskshi. "Political development, the People's Party of Pakistan and the elections of 1970.", University of Massachusetts Amherst Masters Theses 1911 - February 2014, 2641, 1973. Retrieved 23 June 2019.
- ↑ "Meenakshi Gopinath on Vedica Scholars". Vedica Scholars. 2016. http://www.vedicascholars.com/the-faculty/meenakshi-gopinath/.
- ↑ "An interview with Arshiya Sethi". Jawaharlal Nehru University. 2008. http://www.jnu.ac.in/jnunewsarchives/jnunews_july_august08/alumni.htm.
- ↑ "Dr Meenakshi Gopinath on Aberystwyth University". Aberystwyth University. 2016. https://www.aber.ac.uk/en/media/departmental/interpol/ddmi/dr_meenakshi_gopinath_biography.pdf."Dr Meenakshi Gopinath on Aberystwyth University" (PDF). Aberystwyth University. 2016. Retrieved 2 January 2016.
- ↑ "Dr Meenakshi Gopinath on Aberystwyth University". Aberystwyth University. 2016. https://www.aber.ac.uk/en/media/departmental/interpol/ddmi/dr_meenakshi_gopinath_biography.pdf."Dr Meenakshi Gopinath on Aberystwyth University" (PDF). Aberystwyth University. 2016. Retrieved 2 January 2016.
- ↑ "Winners - Platinum". Qimpro Foundation. 2016. http://www.qimpro.com/foundation/awards/education.
- ↑ "Celebrating Womanhood South Asian Region Recognition 2008'". Celebrating Womanhood.org. 2008. http://celebratingwomanhood.org/celebrating-womanhood-south-asian-region-recognition-2008.
- ↑ "Dr Meenakshi Gopinath on Aberystwyth University". Aberystwyth University. 2016. https://www.aber.ac.uk/en/media/departmental/interpol/ddmi/dr_meenakshi_gopinath_biography.pdf.
வெளி இணைப்புகள்
- "Dr. Meenakshi Gopinath Principal, Lady Shri Ram College Delhi retire from services". Asianet (TV channel). 21 August 2014. https://www.youtube.com/watch?v=OUTuDvgojy8.