மிஸ்பாகுல் இஸ்லாம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மிஸ்பாகுல் இஸ்லாம் 1906ம் ஆண்டில் மாதமிரு இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும். இவ்விதழ் முஸ்லிம் சமூக வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு வெளியிடப்பட்டது

ஆசிரியர்

  • முகமது காசிம் ஆலிம்.

பொருள்

'மிஸ்பாகுல் இஸ்லாம்' என்றால் 'இசுலாமிய விளக்கு' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

20ம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்தில் வெளிவந்த ஓர் இதழ். பெருமளவிற்கு 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த இசுலாமிய இதழ்களின் போக்கினையும், மாதிரியையும் பெருமளவிற்கு உள்வாங்கியிருந்தது. இசுலாமிய அடிப்படை கோட்பாடுகள் தொடர்பான விடயங்கள், இசுலாமிய ஆத்மீக ஆக்கங்கள், செய்திகள், இசுலாமிய உலக செய்திகள் போன்றன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 8/9, 1982)