மிசேல் டேனினோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிசேல் டேனினோ

மிசேல் டானினோ (Michel Danino, பிறப்பு: சூன் 4, 1956) இந்தியாவின் வரலாற்றியல், தொல்லியல், கலாச்சாரம், பண்பாடு மற்றும் அதன் பாரம்பரியம் பற்றி தொடர்ச்சியாக பிரான்சிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் அறிஞர்.[1] பிரான்சில் பிறந்து தற்போது இந்தியராக கோவையில் வாழ்ந்துவருகிறார். அரவிந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்த அவர், அரவிந்தர் மற்றும் அன்னையின் புத்தகங்களை மொழிபெயர்த்தல், தொகுத்தல் போன்ற பணிகளில் பங்கு பெற்றிருக்கிறார்.[1] தற்போது காந்திநகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்[2] சிறப்பு பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிறப்பும் துவக்க கால வாழ்வும்

டானினோ ஓன்புளூவர் என்ற பிரான்சு மாகாணத்தில் மொரோக்காவில் இருந்து குடியேறிய யூதக் குடும்பத்தில் 1956 இல் பிறந்தார். மேற்கத்தைய மரபு தந்த சலிப்பினாலும், இந்திய மரபு, அதன் மிக நீண்ட யோகிகளின் வரிசைகள், புவியில் நமது இருப்பிற்கான காரணத்தைக் குறித்த அதன் தனித்துவமான பார்வை போன்றவையும் அவரை இந்தியாவை நோக்கி ஈர்த்தன. அவரது தேடல் அவரை அரவிந்தர் மற்றும் அன்னையிடம் சேர்த்தது.[3] 1977 ல் தனது நான்காண்டு உயர் அறிவியல் படிப்புகளில் அதிருப்தி அடைந்து, பிரான்சிலிருந்து இந்தியா வந்த அவர், அதன் பிறகு இந்தியாவிலேயே, இந்தியக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்.

இந்தியப் பாரம்பரியத்திற்கான அனைத்துலக மன்றம்

2001-ஆம் ஆண்டு டானினோவால் துவக்கப்பட்ட இந்தியப் பாரம்பரியத்திற்கான அனைத்துலக மன்றம், இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றி இக்கால இந்திய இளைஞர்களின் அலட்சியப்போக்கை சீர்செய்யும் ஒரு முக்கிய பணியைச் செய்து வருகிறது.[4][5]

பணி

அவர் எழுதிய தி லாஸ்ட் ரிவர்: ஆன் தி டிரெயில் ஆப் தி சரசுவதி (The Lost River: On The Trail of the Sarasvati) என்ற நூலில் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரசுவதி என்ற ஆறானது, தற்போது காகர் என்றழைக்கப்படும் நதியே என்று மிசேல் குறிப்பிடுகின்றார்[6].

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மிசேல்_டேனினோ&oldid=18895" இருந்து மீள்விக்கப்பட்டது