மால்வி மொழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மால்வி மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மால்வா மண்டலம் மத்தியப் பிரதேசம் இராசத்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5.4 million  (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[1]
இந்தோ-ஐரோப்பா
  • இந்தோ-ஈரானிய
    • இந்தோ-ஆரிய
      • இந்தோ-ஆரிய
        • இராசத்தானி
          • மால்வி மொழி
தேவநாகரி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புமால்வி1234  (மால்வி)[2]

மால்வி மொழி (Malvi language) மால்வி [3] என்பது அகிரி என்ற இனத்தவர்களுக்குச் சொந்தமான ஓா் இந்தோ-ஆரிய மொழியாகும். இந்த மொழி இந்தியாவின் மால்வா மண்டலத்திலும், இராசத்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றது.

எழுத்துமுறை

இந்தியாவில், மால்வி மொழியானது இடமிருந்து வலமாக எழுதப்படும் ஒரு அபுஜிடா எழுத்துமுறையான தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகிறது. முன்னதாக, ராஜஸ்தானி மொழியை எழுத மஹஜானி எழுத்துமுறை அல்லது 'மோடியா' பயன்படுத்தப்பட்டது. சில ஆவணங்களில் இவ்வெழுத்துமுறை 'மரு குர்ஜாரி' என்றும் குறிப்பிடப்படுகிறது.[4][5]

மால்வியின் பேச்சுவழக்குகள்

மால்வி உச்சைனி (உச்சைனி, தார், இந்தூர், தேவாசு, சாசாபூர், செகோர், அகர் மால்வா மாவட்டங்கள்) உஜ்ஜனி என்பது மால்வி மொழியின் வடிவம் ஆகும்.

உமத்வாடி (ராச்கர் மாவட்டம்) உமத்வாடி என்பது மால்வி மொழியின் ஒரு வகையாகும். இதில் அடௌதி மொழியின் சில சிறப்பம்சங்களும் காணப்படுகின்றன.

சோந்த்வாடி (ஜலாவார் மாவட்டம், உச்சைன், அகர் மால்வா) போயாரி/பாவாரி (பேதுல், சிந்த்வாரா, பாதுர்னா, வர்தா மாவட்டங்கள்)[6]

மால்வி மொழி பேசும் மக்களில் சுமார் 75 விழுக்காட்டினர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலுவல் மொழியான இந்தியில் பேசி வருகின்றார்கள். மேலும், இந்தி போன்ற ஒரு இரண்டாம் மொழியில் இவர்களின் எழுத்தறிவு விகிதம் சுமார் 40 விழுக்காடாக இருந்து வருகின்றது. இம்மொழியில், இதுவரை வெளியிடப்படாத பல ஆவணங்களும் படைப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 7 July 2018.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "மால்வி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Martial races of undivided India. Gyan Publishing House. 2009. ISBN 978-81-7835-775-1.
  4. "Goaria". [Ethnologue]. Retrieved 9 August 2009.
  5. "Dhatki". [Ethnologue]. Retrieved 9 August 2009.
  6. "pg no 293,296".
"https://tamilar.wiki/w/index.php?title=மால்வி_மொழி&oldid=466977" இலிருந்து மீள்விக்கப்பட்டது