மாலைமாறன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 245.

மாறன் என்னும் பெயர் பாண்டிய மன்னனைக் குறிக்கும்.

பாடல் சொல்லும் பொருள்

தலைவி கடலோரக் கானலில் தன் விளைட்டுத் தோழியராகிய ஆயத்தாரோடு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது தலைவன் வந்து போனான். அதுமுதல் அவள் தன் நல்லழகை இழந்துவிட்டாள். அது அவளுக்குத் துன்பம் இல்லையாம். பின் எது துன்பம் என்றால், அவன் பிரிந்திருக்கும் கொடுமையை வேல் நட்டு வேலி அமைத்திருக்கும் ஊரில் மக்கள் தூற்றுவதுதானாம். - இப்படித் தலைவி சொல்கிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=மாலைமாறன்&oldid=12693" இருந்து மீள்விக்கப்பட்டது