மாறன் (நடிகர்)
மாறன் | |
---|---|
பிறப்பு | மணிமாறன் 4 சூன் 1972 செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 12 மே 2021 செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 48)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர், [[பாடுதல்}பாடகர்]] |
அறியப்படுவது | கில்லி |
கில்லி மாறன் (Ghilli Maran) என்றும் அழைக்கப்படும் மாறன் (4 சூன் 1972 - 12 மே 2021) ஒரு இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் முதன்மையாக திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார்.
சொந்த வாழ்க்கை
இவர், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் என்ற ஊரில் நாகம்மாள் --நாகப்பன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு 2 சகோதரிகளும், 4 சகோதரர்களும் உள்ளனர். இவர் கிளாரா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு நிவ்யா ஏஞ்சல் என்ற மகள் உள்ளார்.
தொழில்
இவர் 2002 ஆம் ஆண்டு ஏழுமலை திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பெரிய திரையில் அறிமுகமானார். பின்னர் இவர் தரணி இயக்கிய கில்லி (2004) படத்தில் கபடி வீரராக நடித்தார்.[1] அது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. படத்தில் விஜய்யின் நண்பராக நடித்ததற்காக அறியப்பட்டவர். தலைநகரம் படத்தில் ஒரு அடியாளாக மாறனின் நடிப்பு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. அதில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார்.[1] இவர் நடித்த [[சார்பட்டா பரம்பரை], ஆன்டி இன்டியன் போன்ற திரைப்படங்களில் இவரது மரணத்திற்குப் பின் வெளியானது.[2]
கூடுதலாக, இவர் தனது சொந்த ஊரில் கச்சேரிகளில் கானா பாடல்களையும் பாடினார்.[3]
இறப்பு
தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கோவிட்-19 காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாறன்,[4][5] தனது 48ஆவது வயதில் 12 மே 2021 அன்று இறந்தார்.[3]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 The Hindu Net Desk (2021-05-12). "'Ghilli' actor Maran dies of COVID-19" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/ghilli-actor-maran-dies-of-covid-19/article34540766.ece.
- ↑ "Tamil actor Maran dies of Covid-19 at 48". Hindustan Times (in English). 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
- ↑ 3.0 3.1 ChennaiMay 12, Janani K.; May 12, 2021UPDATED; Ist, 2021 10:07. "Ghilli actor Maran dies of Covid-19 at 48 in Chengalpet". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Tamil actor Maran passes away from COVID-19 complications". www.zoomtventertainment.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
- ↑ "Tamil actor Maran passes away due to Covid-19 complications". The Indian Express (in English). 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.