மார்த்தா இச்பக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மார்த்தா இச்பக்
Marta Shpak - folk-pop singer-songwriter .jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மார்த்தா இச்பக்
பிறப்புதிசம்பர் 14
பிறப்பிடம்உக்ரைன்
இசை வடிவங்கள்
  • பாப்
  • நாட்டுப்புற பாப்
  • பாப் ராக்
  • உலக இசை
தொழில்(கள்)
  • பாடகர்-பாடல் எழுதுதல்,
  • நடிகை,*இசயமைப்பாளர்,
  • நடன இயக்குநர்,*எழுத்தாளர்
இசைக்கருவி(கள்)
  • குரலிசை
இசைத்துறையில்1999–தற்போது வரை
இணையதளம்http://martashpak.com

மார்த்தா இச்பக் (Marta Shpak) ஓர் உக்ரைனைச் சேர்ந்த நாட்டுப்புற பாப் பாடகரும், பாடலாசிரியரும், நடிகையும், நடன இயக்குனரும், கலை நிகழ்ச்சிகளின் மேலாளரும் ஆவார். இவர் தனித்துவமான குரல் வளத்தையும், இசை திறமையையும் கொண்டவர். பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை இவர் தனது அழகான மற்றும் சக்திவாய்ந்த பாடலால் மகிழ்வித்தார். முதன்முதலில் ஐந்து வயதில் பாடத் தொடங்கினார். மேலும், ஐந்து இசைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் கலைகளில் முதுகலைப் பட்டமும் (நாடகம், செயல்திறன் ஆய்வுத் திட்டம்), தேசிய கலாச்சார கலை நிர்வாக மேலாண்மை நிறுவனத்தில் (கியேவ், உக்ரைன்) நடனவியலிலும், மேலாண்மையிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார். உக்ரைனின் உள்துறை அமைச்சகம், இவரது பாடல்கள் மற்றும் நடனத்திற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாநிலத்தின் உக்ரைனின் குடியரசுத் தலைவரால் 2009 ஆம் ஆண்டில் இவருக்கு உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை

உக்ரைனின் பாரம்பரிய உடையில் மார்த்தா இச்பக்

மார்த்தா இச்பக் உக்ரைனின் பெரிகின்சுகு நகரில் பிறந்தார். இவரது குழந்தைப் பருவத்திலேயே இசையானது இவரது முக்கிய ஆர்வமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது. இவர் குழந்தைகள் கலைப் பள்ளியில் பயின்றார். "மாலெங்கி போய்கி" என்ற நாட்டுப்புறக் குழுவுடன் சுற்றுப்பயணங்கள் செய்தார். இவரது தாயார் நடாலியா இசுபக், இவருக்கு இசைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 5 வயதில், மார்த்தாவும் இவரது சகோதரி ஆன் என்பவரும், முதலில் அனைத்து உக்ரேனிய, சர்வதேச நாட்டுப்புற விழாக்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிபெறத் தொடங்கினர். [3]

தொழில்

இவர், உக்ரேனிய ராக்-இசைக்குழுவான "இசுகை" ( "S.K.Y" ) உடன் ஒரு இசைத் தொகுப்பை பதிவு செய்தார். மேலும், இசைக்குழுவின் முன்னணிக் கலைஞன் ஒலெக் சோப்சுக்குடன் இணைந்து பாடும் ஒரு இசை காணொலியையும் பதிவு செய்தார்.

இவர், உக்ரேனிய விழாக்களிலும், கனடாவில் நிதி திரட்டும் இசை நிகழ்வுகளிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்.[4] [5] இவர், தென்னி டிமார்ச்சி தென்னி டிமார்கி "சோலோடா" வுடன் உக்ரைனின் சுதந்திர தின 25வது ஆண்டு விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட தனது புதிய பாடலைப் பதிவு செய்து வெளியிட்டார். பாடல் வரிகளை ரோமன் விராஸ்டியூக்கின் என்பவர் எழுதியிருந்தார். [1]

இவர் தெனி திமார்ச்சி என்பவருடன் சேர்ந்து முதல் இசை காணொலி ஒன்றை 2018 "கிறிஸ்துமஸ் தின"த்தன்று வெளியிட்டார் . பிரான்சிஸ் கோரல் மெல்லன், வோலோடிமிர் முசூர் ஆகியோரால் கனடா மற்றும் உக்ரைனில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்களில் அனைவராலும் வரவேற்பைப் பெற்றது. [2] [3] இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார்.

2021இல் இசைப் பணிகள்

இவர், தனது முதல் ஆங்கில இசைத் தொகுப்புக்காக கனடிய இசைக்கலைஞர்களுடனும், திரைப்பட இயக்குனர்களுடன் பணிபுரிகிறார். அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இவரது இசைப் பயணம் தொடர்கிறது; தொராண்டோவிலுள்ள இளம் மக்கள் அரங்கில் 2021 உலக குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் செயல்திறன் மாநாட்டில் தனது அறிவியல் ஆராய்ச்சி-உருவாக்கும் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருகிறார். [4] .

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மார்த்தா_இச்பக்&oldid=9457" இருந்து மீள்விக்கப்பட்டது