மார்க்கண்டேயனார் காஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மார்க்கண்டேயனார் காஞ்சி என்பது பழமையான நூல்களில் ஒன்று. இளம்பூரணர் இந்த நூலின் பாடல்-பகுதி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.[1]

பாடல்
பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின
ஆயிரம் மணிவிக்கு அழலும் சேக்கைத்
துளிதரு வெள்ளத் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி எளிது எனக் கூறின்
இம்மை இல்லை மறுமை இல்லை
நன்மை இல்லை தீமை இல்லை
செய்வோர் இல்லை செய்பொருள் இல்லை
அறிவோர் யார்இஃது இறுவழி இறுகென ...
  • இந்தப் பாடல் நிலையாமை பொருள்மேல் காஞ்சி.
  • தோல் என்னும் வனப்புநூலுக்கு இது எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம், செய்யுளியல், நூற்பா 230 உரை.