மல்லி (திரைப்படம்)
மல்லி | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் சிவன் |
தயாரிப்பு | சந்தோஷ் சிவன் |
கதை | சந்தோஷ் சிவன், ரவி தேஷ்பண்டே |
இசை | அஸ்லம் முஸ்தபா |
நடிப்பு | பி. ஸ்வேதா பிரியா ஜனகராஜ் பரமேஷ்வரன் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
வெளியீடு | 1998 |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மல்லி என்பது 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 46 ஆவது தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த சூழலியல் பாதுகாப்புப் பிரிவில் விருது வென்றது.[1][2]
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஏழைப் பெண்ணான மல்லி பி. ஸ்வேதா தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள். தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள். அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது. அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊனம் மாறிவிடும் என்று கூறுகின்றான். அவளும் அந்த நீலநிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள். இதுவே கதையின் கருவாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Malli" இம் மூலத்தில் இருந்து 2 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231102043709/https://www.cfsindia.org/malli/.
- ↑ "Malli" இம் மூலத்தில் இருந்து 20 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210920041408/http://www.ccfsouthasia.org/films/malli-2.