மலையமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலையமான்
ஆட்சி மொழி தமிழ்
குலப்பெயர் மலையமான்
தலைநகரம் திருக்கோயிலூர்

மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். இவர்கள் திரு கோவலர் ஊரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள்.

திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[1].

பக்தி இலக்கிய காலம்

இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "south_indian_inscriptions/volume_22". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 2008-11-09.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மலையமான்&oldid=17503" இருந்து மீள்விக்கப்பட்டது