மலைக் கண்ணாடி (இதழ்)
Jump to navigation
Jump to search
மலைக் கண்ணாடி இலங்கை, இரத்தினபுரியிலிருந்து 1980களில் வெளிவந்த இரு மாத கலை இலக்கிய சிற்றிதழாகும். இதன் முதல் தை - மாசி இதழாக 1980ல் வெளிவந்தது.
பதிப்பாசிரியர்
- எப். மரிய சன்தனா
ஆசிரியர்
- கலா விஸ்வநாதன்
ஆசிரியர் பக்கம்
முதல் இதழின் ஆசிரியர் பக்கத்தில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலையக மக்கள் உள்ளங்களில் புதிய சிந்தனைகளைத் தூண்டவும், தெளிவான நிதானமான விழிப்புணர்ச்சியினை உண்டாக்கவும் மலைக்கண்ணாடி தன்னைத் தயார்படுத்தி உங்கள் கைகளில் காட்சி தருகின்றது. அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு ஐக்கியம் சமாதானம் அபிவிருத்தி தோட்டத் தொழிலாளர்களிடையே தோன்றம் வேண்டும் என்பதே மலைக்கண்ணாடியின் நோக்கம்."
உள்ளடக்கம்
இவ்விதழில் கவிதைகள், சிறுகதைகள், மலையகம் தொடர்பான பதிவுகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.