மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


மலேசியத் தமிழ்ச்சமய பேரவை[1] என்பது மலேசியாவில் தமிழ் சமய[2][3] அமைப்புக்கான பொதுவான தளத்தை அமைப்பதற்கான ஒரு முயற்சியாகும். 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று உலக தமிழர் பதுகப்பு செயலகம் நகர்வில், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூரில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இருண்டு முக்கிய தீர்மானங்களாக; தமிழ் சமயமே, தமிழரின் சமய அடையாளமாகும், தமிழ்ச் சமய பேரவை அமைத்து சமய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் எனும் மேலும் பத்து பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது.


15 09 2019, மலேசியா தமிழ்ச் சமய பேரவை நகர்வில் முதலாம் தமிழ்ச் சமய மாநாடு 2019 நடந்தேறியது. நாடு முழுவதிலுமிருந்து திரு முருகன் பத்துமலை திரு கோயில்  மண்டபத்திற்கு சுமார் 1000 பெர், திரண்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டண[4]. இம் மாநாடுன் கருப்பொருளாக தமிழ் சமய மீள்ச்சியே தமிழர் இனத்தின் எழுசியே என்ற முழக்கத்துடன் இனிதே நகர்ந்தது. தமிழ் வாழ்வியல் இயக்கம்[5][6] மற்றும் வள்ளலார் அன்பு நினலயம், கோவை பேரூராதீனத்தின் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தொல்காப்பிய செம்மல்  தமிழ்திரு இர . திருச்செல்வனார் ஐயா(தமிழியல் ஆய்வுக் களம்  மலேசியா) , மற்றும் மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர் திருமுறைச் செம்மல் முனைவர் நா தர்மலிங்கம் ஐயா, ஆகியோரின் ஆதரவால் பேரவை நடைபெற்றன.

குறிப்புகள்