மருங்கூர்ப் பட்டினம்
Jump to navigation
Jump to search
மருங்கூர்ப்பட்டினம் துறைமுகத்தைப் பற்றி நக்கீரர் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கடலோர ஊணூரை அடுத்து மருங்கூர்ப் பட்டினம் இருந்தது. ஊணூர் அரசன் தழும்பன். மருங்கூர்ப்பட்டின அரசன் வழுதி. ஊணூர் அன்றில் பறவைகளின் புகலிடம்.
- மருங்கூர்ப்பட்டினம் வங்கக்-கப்பல்களில் வாணிகம் செய்வோர் வாழுமிடம்.[1]
- இவ்வூர் அரசன் வழுதி ‘பசும்பூண்-வழுதி’ எனச் சிறப்பிக்கப்படுகிறான்.[2]
- இவ்வூர் திருவுடை வியனகர் எனப் போற்றப்படுகிறது. இவ்வூர் மகளிர் விருந்தினர்க்கு ஊட்டிய மிச்சத்தைப் புறங்கடையில் வீசுவார்களாம். அதனை உண்ட கடற்காக்கை அங்காடித் தெருவில் இளைப்பாறுமாம். பின் இறால் மீனை உண்ண அங்குள்ள கடலில் நிற்கும் வங்கக்-கப்பலின் கூம்பில் தங்குமாம்.[3]
அடிக்குறிப்பு
- ↑ தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் வருநர் வரையாப் பெருநாள் இருக்கை தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வைப்பின் ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம் – ஆவணக் கம்பலை நக்கீரர் - அகநானூறு 227-18
- ↑ பெருஞ்சேறு இறவின் துய்த்தலை முடங்கல் சிறுவெண்-காக்கை நாளிரை பெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (தலைவி கவின்) நக்கீரர் – நற்றிணை 358
- ↑ பசுங்கட் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் மருங்கூர்ப்பட்டினம் - நக்கீரர் நற்றிணை 258