மரிய இருதயம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மரிய இருதயம் இந்திய கேரம் விளையாட்டு வீரர் ஆவார். 1956-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் 2 முறை உலக கேரம் விளையாட்டு போட்டியிலும், 9 முறை தேசிய கேரம் விளையாட்டுப் போட்டியிலும் வெற்றியாளராக வாகை சூடியவர். கேரம் விளையாட்டில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 1997-ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு வீரர்களுக்கான விருதான அருச்சுனா விருது வழங்கியுள்ளது. 2014-ம் ஆண்டு வரையான இந்திய வரலாற்றில், கேரம் விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற ஒரே விளையாட்டு வீரர்.[1].

வாழ்க்கை

இவரது பெற்றோர் ஒய்.அந்தோணி சைமன், ஆரோக்கியமேரி. படித்தது பத்தாம் வகுப்புவரை. இந்தியன் ஏர்லைன்ஸ்சில் துணை மேலாளராக பதவி. இரண்டு மகன்கள்.

விளையாட்டு

இவர் கேரம் விளையாடத் தொடங்கிய இரண்டாவது ஆண்டில், பள்ளி மாணவர்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பத்திரிக்கையாளர் சங்க விருதுகிடைத்தது. 1991ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற உலக வாகையர் போட்டியில் முதல் முறையாக வாகையர் பட்டம் வென்றார். 1992இல் உலக வாகையர் பட்டம் வென்றதற்காகக் குருநாதன் டிராபி வழங்கி கௌரவித்தது பத்திரிக்கையாளர் சங்கம். 1995ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது முறையாக அப் பட்டத்தை வென்னார். 'சார்க் வாகையர்' பட்டப் போட்டியில் கோப்பையை வென்றார். 9 முறை தேசிய வாகையர் பட்டத்தை வென்றார். பிரஞச் ஓப்பன் பட்டம், கேரம் சம்மேளனம் துவக்கப்பட்டு 10ஆம் நிறைவையொட்டி கனடாவில் நடத்தப்பட்ட போட்டியில் வாகையர் பட்டம் வென்றார்.[2]

விருதுகள்

  • தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் விருது
  • அர்ஜுனா விருது (1997)
  • ஜெர்மன் கேரம் கூட்டமைப்பின் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான விருது (1998)

மேற்கோள்கள்

  1. "கேரம் விளையாட்டு வீரர் மரிய இருதயம்". தி இந்து (ஆங்கிலம்). Archived from the original on 2009-04-27. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2014.
  2. தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்116
"https://tamilar.wiki/index.php?title=மரிய_இருதயம்&oldid=28180" இருந்து மீள்விக்கப்பட்டது