மரியா அரோரா குட்டோ
இயற்பெயர் | மரியா அரோரா குட்டோ |
---|---|
பணி |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்மசிறீ (2010) |
மரியா அரோரா குட்டோ (Maria Aurora Couto) ஒரு இந்திய எழுத்தாளரும், கோவாவைச் சேர்ந்த கல்வியாளரும் ஆவார். கோவா: ஒரு மகளின் கதை (Goa: A Daughter's Story) என்ற புத்தகத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் வடக்கு கோன் கிராமமான ஆல்டோனாவில் வசிக்கிறார். இவர் தாமோதர் தர்மானந்தா கோசாம்பியின்"டிடி கோசாம்பி எண்ணங்களின் திருவிழா"வைத் தொடங்க உதவினார் . மேலும், கோவா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்.
ஆரம்பகால வாழ்க்கையும்
குட்டோவின் குடும்பம் பாமோன் சமூகத்தைச் சேர்ந்தது. இவருடைய பெற்றோர், பிரான்சிஸ்கோ (சிகோ) பிகியூரிடோ மற்றும் பிலோமினா போர்கஸ் இருவரும் சால்செட்டைச் சேர்ந்தவர்கள். அபோது மது அருந்துவது தடை செய்யப்பட்டிருந்ததால், தந்தையின் குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இவர் குழந்தையாக இருந்தபோதே தன் பெற்றோருடனும் ஆறு உடன்பிறப்புகளுடனும் தார்வாடு சென்றார். ஆனால், இவருடைய தந்தை தனது குடும்பத்தை கைவிட்டு, கோவாவுக்குத் திரும்பி, குடிப்பழக்கத்தைத் தொடர்ந்து முன்கூட்டியே இறக்கத் தேர்வு செய்தார்.[1][2] தில்லியின் லேடி சிறீ ராம் கல்லூரியிலும், பனஜியின் தேம்பே கல்லூரியிலும் ஆங்கில இலக்கியம் கற்றுக் கொடுத்தார் .[3] மேலும், இந்தியாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் வெளிவரும் பருவ இதழ்களில் பங்களித்தார்.
குடும்பம்
இவரது கணவர் அல்பானோ குட்டோ, இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர். இவர்கள் மும்பையில் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[3] அவரது வேலையின் தன்மை காரணமாக, இவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து தங்கியிருந்தார்கள். இறுதியாக கோவாவின் ஆல்டோனாவில்,[4] அவரது மூதாதையர் சிலகாலம் சென்னையில் குடியேறினர்.. இவர் தென்னாப். மேலும், திரைப்படங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவர் ஆசிரியராக இருந்தபோது ஒரு திரைப்படச் சங்கத்தைத் தொடங்கினார்..[3] இவரது கணவர் அல்பானோ சூன் 2009இல் காலமானார்.[5]
தொழில்
கூட்டோவின் எழுத்து வாழ்க்கை 1986 கிரகாம் கிரீனைப் பற்றிய புத்தகத்துடன் தொடங்கியது. 2004இல் வெளியான கோவா: ஒரு மகளின் கதை என்ற புத்தகம், சுயசரிதையாக கோவாவின் வரலாற்றையும் உள்ளடக்கியது. இந்த புத்தகம் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து அதன் போர்த்துகீசிய குடியேற்றம் முதல் அதன் விடுதலை மற்றும் அடுத்தடுத்த கலாச்சார இழப்பு வரை கோவாவைப் பற்றி விவாதிக்கிறது.[6] 2014 ஆம் ஆண்டில், கோட்டோ, "பிலோமினாவின் பயணங்கள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது இவரது தாயார் பிலோமினா போர்கஸின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்கிறது. இது "கோவாவின் இறக்கும் கத்தோலிக்க உயரடுக்கை" உள்ளடக்கியது. இது கோவாவில் சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.[7]
2008 இல் கோசம்பியின் நூற்றாண்டு குழுவின் தலைவராக இருந்ததால், கோட்டோவின் கலாச்சாரத் துறையால் நிதியளிக்கப்பட்ட சொற்பொழிவுத் தொடரான கோசம்பி திருவிழாவின் தொடக்கத்தைத் தொடங்க கூட்டோ உதவினார்.[8] கோவா பல்கலைக்கழகத்தில் குட்டோ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.[3] கோசாம்பியின் வரலாற்றாய்வுமுறை இந்திய வரலாற்றாய்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மன்னனின் பெயரைவிட எந்த வகையான கலப்பை பயன்படுத்தப்பட்டது என்பதே வரலாற்றை ஆராய்வதற்கு முக்கியமானது என அவர் கூறினார்.
விருது
2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு, மரியா அரோரா குட்டோவுக்கு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ கௌரவத்தை வழங்கியது.[9][10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் மரியா அரோரா குட்டோ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ↑ Couto, Maria Aurora (2013). Filomena's Journeys: A Portrait of a Marriage, a Family & a Culture.
- ↑ Moniz Barbosa, Alexandre (Dec 4, 2013). "Maria Aurora Couto: A Goan daughter's story of her mother's inspiring journey". https://timesofindia.indiatimes.com/city/goa/A-Goan-daughters-story-of-her-mothers-inspiring-journey/articleshow/26819917.cms.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Coutinho, Tonella (May 10, 2015). "Goa’s daughter tells her story". https://timesofindia.indiatimes.com/city/goa/Goas-daughter-tells-her-story/articleshow/47216850.cms.
- ↑ "Mega debate at Canacona remains inconclusive". 18 August 2010. https://issuu.com/herald-goa/docs/18_aug/4.
- ↑ "Alban Couto no more". 28 June 2009. https://timesofindia.indiatimes.com/city/goa/Alban-Couto-no-more/articleshow/4711196.cms.
- ↑ Hoskote, Ranjit (2004-04-04). "Apparent divide, actual bridges" இம் மூலத்தில் இருந்து 2004-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040414024905/http://www.hindu.com/mag/2004/04/04/stories/2004040400140200.htm.
- ↑ Pisharoty, Sangeeta Barooah (2014-03-26). "A sketch in time". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/a-sketch-in-time/article5835829.ece.
- ↑ "Dr Kosambi an active fighter for peace: Ansari". 2008-02-04. https://www.oneindia.com/2008/02/04/dr-kosambi-an-active-fighter-for-peace-ansari-1202146386.html.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "List of Padma awardees 2010". 2010-01-26. https://www.thehindu.com/news/national/List-of-Padma-awardees-2010/article16839604.ece.