மன்னார் அமுதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மன்னார் அமுதன்
மன்னார் அமுதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மன்னார் அமுதன்
பிறப்புபெயர் 1984, சோசப்பு அமுதன் இடானியல்
பிறந்ததிகதி 1984
பிறந்தஇடம் சின்னக்கடை, மன்னார், இலங்கை
தேசியம் இலங்கையர்
அறியப்படுவது எழுத்தாளர்
பெற்றோர் அனிசிடசு பிரின்சு தேவேந்திரன் சோசப்பு, சகாயம் விராசுப்பிள்ளை சோசப்பு

மன்னார் அமுதன் (Mannar Amuthan) அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் சோசப்பு அமுதன் இடானியல் அல்லது ஜோசப் அமுதன் டானியல், தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பாக்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சின்னக்கடையில், 1984ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார். இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின், 1990இல் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், விருதுநகர் மாவட்டத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

எழுதிய நூல்கள்

  • விட்டு விடுதலை காண், பாத்தொகுப்பு.
  • அக்குரோணி, பாத்தொகுப்பு.

விருதுகளும் பட்டங்களும்

2011இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=மன்னார்_அமுதன்&oldid=2582" இருந்து மீள்விக்கப்பட்டது