மனோரமா ஜபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மனோரமா ஜபா
இயற்பெயர்/
அறியும் பெயர்
மனோரமா ஜபா
பிறந்ததிகதி 1932
பிறந்தஇடம் இந்தியா
பணி எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ
துணைவர் திரு. வீரேந்திர சிங் ஜஃபா

மனோரமா ஜஃபா (Manorama Jafa) இந்திய குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் 200 க்கும் மேற்பட்ட நூல்களையும், கதைகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்ற 600 வெளியீடுகளையும் எழுதியுள்ளார். [1] [2] இலக்கியத் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக, 2014 ஆம் ஆண்டில், இந்திய அரசின், நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ பெற்றார். [3]

வாழ்க்கை

ஜஃபா 1932 இல் பிறந்தார் [4] இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் புவியியலில் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். வீரேந்தர் சிங் ஜாஃபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். துவக்கத்தில் செய்தித் தாள்களில் எழுதிய இவர் பின்னர் கதைகளை எழுதத் துவங்கினார்.

இவரது கணவர் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிய அமெரிக்காவுக்குச் சென்றபோது , மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் கதை எழுதும் பிரிவினைப் பயின்றார்.

மனோரமாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது இளைய மகள், நவினா ஜாஃபா, பரவலாக அறியப்படும் கதக் நடனக் கலைஞர் ஆவார்.

தொழில், சாதனைகள் மற்றும் மரபு

மனோரமா ஜபா 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட எழுத்தாளர் ஆவார்.[சான்று தேவை] இவர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மற்றும் அவரது கதைகள் சப்பானிய, [5] இடச்சு, இத்தாலி மற்றும் எசுப்பானிய போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [6] டான்கி ஆன் தி பிரிட்ஜ் இவரது முதல் நூலாகும்.

மனோரமா ஜபா இளைஞர்களுக்கான புத்தகங்கள் தொடர்பான சர்வதேச வாரியத்தின் இந்திய தேசிய பிரிவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார் [7] (IBBY) யுனெஸ்கோவிற்கான ஆசிய கலாச்சார மையத்துடன் இணைந்து செயல்பட்டார். அதில் குழந்தைகள் நூல்கள் பிரிவிற்கான நிபுணராகவும் ஈடுபட்டார்.[சான்று தேவை]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

இவரது படைப்புகள் பல அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐபிசி, 1999 இல், இவரை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 2000 அறிஞர்களில் ஒருவராக மதிப்பிட்டது. நமி தீவு சர்வதேச குழந்தைகள் புத்தக விழா, நாம்புக் விழாவில், [8] இவரை எ லிவிங் டிரஷர் ஃபார் தெ சில்ட்ரன்ஸ் லிட்டரேசர் இன் இந்தியா என கௌரவித்தது.

சிறுவர் இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான இவரது முயற்சிகளை கௌரவிக்கும் விதமாக, மனோரமா ஜபாவுக்கு இந்திய அரசு 2014 இல் பத்மசிறீ விருதை வழங்கியது.

சான்றுகள்

  1. "A Life of Stories". 12 May 2014. http://indianexpress.com/article/cities/delhi/a-life-of-stories/. 
  2. "No child's play". The Hindu. 19 January 2011. http://www.thehindu.com/news/cities/Delhi/no-childs-play/article1102828.ece. 
  3. "Padma Awards Announced". Press Information Bureau, Government of India. 25 January 2014 இம் மூலத்தில் இருந்து 8 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6NEu2cjx3?url=http://www.pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=102735. 
  4. "Oxford Encyclopedia of Children's Literature Bio". Oxford Encyclopedia of Children's Literature. 2014. http://www.answers.com/topic/manorama-jafa. 
  5. "Emperor, Empress revisit India center after 53 years". Japan Times. 2014. http://www.japantimes.co.jp/news/2013/12/04/national/emperor-empress-revisit-india-center-after-53-years/#.VA5608vlrIU. 
  6. "Translation". Jacket Flap.com. 2014 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140910195456/http://www.jacketflap.com/manorama-jafa/100863. 
  7. "IBBY". IBBY. 2014. http://www.ibby.org/index.php?id=427. 
  8. "Nambook Festival". Nami Island. 13 August 2012 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140910195530/http://nambookfestival.tistory.com/6. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மனோரமா_ஜபா&oldid=18888" இருந்து மீள்விக்கப்பட்டது