மனைவி அமைவதெல்லாம் (திரைப்படம்)

2014 பிப்ரவரியில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை உமா சித்ரா இயக்கியுள்ளார்[1]. மோகன் ராசு, பாக்ய ராசேசுவரி போன்ற பலர் நடித்துள்ளனர்.

மனைவி அமைவதெல்லாம்
இயக்கம்உமா சித்ரா
இசைஅபு
நடிப்புமோகன் ராசு
பாக்ய ராசேசுவரி
ஒளிப்பதிவுஇராச சேகர்
வெளியீடு2014 பிப்ரவரி
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

ஒரு வீட்டில் 2 குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒரு குடும்பம் மோகன் ராசுவினது, மற்றொரு குடும்பம் பாசுகருடையது. மோகன் ராசின் மனைவி சசி, எப்போதும் தன் கணவர் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இதனால் மோகன் ராசுக்கு கவலை. பாசுகர் எப்போதும் குடித்துக் கொண்டு வேலைக்கு சரியாக போகாமல் இருக்கிறார். இதனால் மனைவி சுமதிக்கு தன் கணவர் இப்படி இருக்கிறார் என்று கவலை. இதனால் இருவர் வீட்டிலும் அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் அந்த வீட்டின் உரிமையாளர் மகன் சந்துருவுக்கு, நமக்கு திருமணம் நடந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமணம் செய்ய தயங்கி கொண்டிருக்கிறார்.

ஒருநாள் சந்துருவுக்கு, அனைவரும் பெண் பார்க்க செல்கிறார்கள். மணப்பெண்ணை பார்த்து வீட்டுக்கு திரும்பிய சந்துரு, அந்த பெண் எப்படிப்பட்டவள், உங்கள் மனைவி போல் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்று மோகன் ராசிடம் கூறுகிறான். மேலும் அந்த பெண் குறித்த முழு விபரத்தை அறிந்து சொல்லுங்கள் என்று விசாரிக்க சொல்கிறார். அதற்கு சம்மதித்து செல்லும் மோகன் ராசு, ஒரு நாள் வழியில் சந்துருவுக்கு பார்த்த பெண்ணை சந்தித்து பேசுகிறார் மோகன் ராசு. அதை அவரின் மனைவி சசி பார்த்து தவறாக புரிந்து கொள்கிறார். கோபத்தில் தன் தாலியை குளியலறை கதவில் தொங்க விடுகிறார். இதனால் வீட்டில் பிரச்சினைகளும் குழப்பங்களும் தீர்வுமாக திரைக்கதை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "மனைவி அமைவதெல்லாம்". மாலைமலர். http://cinema.maalaimalar.com/2014/02/23121228/manaivi-amaivathellam-cinema-r.html. பார்த்த நாள்: 16 மார்ச் 2014.