மனுவல் அலெக்சாண்டர்
Jump to navigation
Jump to search
மனுவல் அலெக்சாண்டர் (ஜனவரி 2, 1929) ஈழத்து நாட்டுக்கூத்துக்கலைஞர். தென்மோடி நாடகங்கள் பல நடித்தார். பல தென்மோடிக்கூத்துக்களை மேடையேற்றிய அண்ணாவியார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை ஊர்காவற்றுறை கரம்பனில் மனுவல் அலெக்சாண்டர் ஜனவரி 2, 1929-ல் பிறந்தார். ராசு என்பது செல்லப்பெயர். கடல்சார் பல்வேறு தொழில்களைச் செய்தார்.
கலை வாழ்க்கை
தென்மோடி நாடகத்தில் கலை ஆர்வமுள்ளவர். மெலிஞ்சிமுனை தென்மோடிக்கோத்துக்களுக்கு பெயர் போன ஊர். அங்கு அனந்தசீலன் நாட்டுக்கூத்தில் அருள்நேசவான் பாத்திரத்தில் மனுவல் அலெக்சாண்டர் நடித்தார். ஊர்காவற்றுறை, நாரந்தனை, கரம்பன், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் கூத்துக்களில் மேடையேறினார். கிருத்தோ சவரிமுத்து இவருடைய நாடகங்களுக்கு மிருதங்கம் வாசித்து புகழ்பெற்றார்.
இணைந்து நடித்தவர்கள்
- புத்திரர் பாக்கியம்
- அ. மடுத்தீஸ்
- அமிர்தன் வைத்தி
- யா. இம்மானுவேல்
- அதிரீயம் சீமாம்பிள்ளை
- இ. பவளம்
சீடர்கள்
- ச. செபஸ்தியாம்பிள்ளை
- கி. இலக்மன்
- லு. சேவியர்
- செ. சைமன்
- செ. லோறன்ஸ் எட்வைட்
- அ. ஜோண்சன்
- பாக்கியம் மைக்கல்தாஸ்
- பாக்கியம் செல்வரத்தினம்
- யேசுதாசன்
- பா. தவம்
நடித்த நாடகங்கள்
- ஆனந்தசீலன் - அரசன்மகன்
- அலசு - அரசகுமாரன்
- ஞானகானத்தன் - செட்டி
- ஊசோன்பலந்த - வர்த்தகன்
- புஸ்பா நாடகம - பூபதி
- கண்ணொளிகொடுத்தகாரிகை - ஜெயசீலன்
- பூதத்தம்பி - அந்திராசி
அரங்கேற்றிய கூத்துக்கள்
- அந்தோனியார் நாடகம்
- தொன்நீக்களார் நாடகம்
- கண்ணொளி கொடுத்த காரிகை நாடகம்
- மரியதாசன் நாடகம்
- பூதத்தம்பி