மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு (BRTS)
தகவல்
அமைவிடம்மதுரை, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்2
இயக்கம்
இயக்குனர்(கள்)மதுரை மாநகராட்சி

மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு (Madurai Bus Rapid Transit System, (BRTS)) என்பது, மதுரை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மாநகராட்சியினரால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

அறிவிப்புகள்

2009ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.600 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்தினை மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதில் முக்கிய திட்டமான, பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பை மேற்கோள் காட்டினர். 6 வழிச்சாலையான இத்திட்டத்தில், நடுவிலுள்ள 2 வழி நகர பேருந்துகளுக்காகவும், அடுத்த 2 வழி பிற வாகனங்களுக்காகவும், கடைசி 2 வழி, அணுகுசாலைக்காக என திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் தெரிவு செய்து பரிந்துரைக்கு அனுப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தினால் அரசரடியையும் தேனி நெடுஞ்சாலையையும் இணைக்கும் பாலம் ஒன்று கோரிப்பாளைய சாலை சந்திப்பில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வழித்தடங்கள்

மாநகரின் இரு பெரும் வழித்தடங்களை தெரிவு செய்து பரிந்துரைக்கு அனுப்பட்டுள்ளது.[1]

தடம் 1: பாத்திமா கல்லூரி — பழங்காநத்தம் சாலை சந்திப்பு [வழி: திண்டுக்கல் பைபாஸ் சாலை]
தடம் 2: காமராசர் பாலம் — விரகனூர் சுற்றுச்சாலை [வழி: வைகை வடக்குக் கரையோரம்]

சான்றுகோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.