மதர் டெய்ரி
| வகை | தேசியப் பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனம் |
|---|---|
| முதன்மை நபர்கள் | மணீஷ் பண்டிலீஷ் (மேலாண்மை இயக்குநர்) |
| தொழில்துறை | பால் மற்றும் பால் பொருட்கள் |
| உற்பத்திகள் | |
| வருமானம் | ₹15000 கோடி ($1.8 பில்லியன்) (2024)[1] |
| உரிமையாளர்கள் | தேசியப் பால்பண்ணை மேம்பாட்டு வாரியம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம், இந்திய அரசு |
மதர் டெய்ரி (Mother Dairy) என்பது இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியப் பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்.[2]. 1974ஆம் ஆண்டில் நொய்டாவில் நிறுவப்பட்ட மதர் டெய்ரி நிறுவனத்தின் பணி பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்வது, சந்தைப்படுத்துவதும் மற்றும் விற்பனை செய்வதாகும்.[3]
வரலாறு
1971ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டித் தருவதற்காக இந்தியாவில் வெண்மைப் புரட்சி இயக்கம் துவங்கப்பட்டது.[2][4]வெண்மைப் புரட்சி இயக்கத்தின் கீழ் வட இந்தியாவின் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டது. இப்ப்பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கிராமப்புற மக்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, மதர் டெய்ரி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மதர் டெய்ரி நிறுவனம் பாலை பதப்படுத்திய பால் மற்றும் பால் பொருட்களை தேசிய தலைநகர் தில்லை வலயப் பகுதிகளில் உள்ள 1,500 விற்பனை மையங்கள் மற்றும் இதன் துணை நிறுவனமான சஃபால் எனும் காய்கறி & பழக் கடைகளில் வைத்து விற்பனை செய்கிறார்கள்.[4]
வணிகப் பெயர் & துணை நிறுவனம்
இந்நிறுவனம் மதர் டெய்ரி எனும் வணிகப் பெயரில், தேசிய தலைநகர் தில்லை வலயப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 30 இலட்சம் லிட்டர் பால் மற்றும் பால் பொருட்களை விற்கிறது.[4][2]மதர் டெய்ரி நிறுவனம் நடத்தும் துணை நிறுவனமான சஃபால் கடைகள் பெங்களூரில் ஆண்டிற்கு 23,000 மெட்ரிக் டன் பழக் கூழ் உற்பத்தி செய்கிறது. சஃபால் மூலம் பழக்கூழை, பழங்கள், காய்கறிகள் ஐக்கிய அமரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. [5]
மதர் டெய்ரி நிறுவனம் சூலை 2020ஆம் ஆண்டில் காலை உணவிற்கு சாண்ட்விச் ரொட்டி, கோதுமை ரொட்டி மற்றும் குழந்தைகளுக்காக பழ ரொட்டி என மூன்று வகையான ரொட்டிகளை விற்கிறது.[2][2][4]
வருவாய்
2020ஆம் ஆண்டு முடிய மதர் டெய்ரியின் ஆண்டு வருவாய் ₹10,000 கோடி ஆகும்.[6]
தயாரிப்புகள்
பால் & பால் பொருட்கள்
மதர் டெய்ரி நிறுவனத்தின் தயாரிப்புகள் பின்வருமாறு:
- பால்
- தயிர்
- மோர்
- வெண்ணெய்
- நெய்
- லஸ்ஸி
- பனீர்
- பழத்தயிர்
- பாலாடைக்கட்டி
- ஐஸ் கிரீம்
- ரொட்டிகள்
மதர் டெய்ரியின் இனிப்புகள்
மதர் டெய்ரி நிறுவனம் 5 வகையான இனிப்புகளை விற்கிறது[4]. அவைகள்:
- பால்கோவா
- ஆரஞ்ச் மாவா பர்பி
- இரசகுல்லா
- குலாப் ஜாமுன்
மேற்கோள்கள்
- ↑ "Mother Dairy forays into bread segment, aims to double its revenue in 5 yrs". Business Standard India. Press Trust of India. 30 July 2022. https://www.business-standard.com/article/companies/mother-dairy-forays-into-bread-segment-aims-to-double-its-revenue-in-5-yrs-120073001284_1.html#:~:text=Chaudhary%20said%20the%20company%20has,around%20Rs%2010%2C000%2D11%2C000%20crore..
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Mother Dairy Wants To Break Bread With You!". Moneycontrol. 30 July 2020. https://www.moneycontrol.com/news/business/mother-dairy-wants-to-break-bread-with-you-5621361.html.
- ↑ Mother Dairy eyes nutritional space
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Mother Dairy expands packaged sweets portfolio, eyes Rs 100 crore revenue in 2–3 years". www.businesstoday.in. 15 January 2021. https://www.businesstoday.in/current/corporate/mother-dairy-expands-packaged-sweets-portfolio-eyes-rs-100-crore-revenue-in-2-3-years/story/427979.html.
- ↑ "About Us". www.motherdairy.com. Retrieved 2021-05-23.
- ↑ "Mother Dairy forays into bread segment, aims to double its revenue in 5 yrs". Business Standard India. Press Trust of India. 2020-07-30. https://www.business-standard.com/article/companies/mother-dairy-forays-into-bread-segment-aims-to-double-its-revenue-in-5-yrs-120073001284_1.html#:~:text=Chaudhary%20said%20the%20company%20has,around%20Rs%2010,000-11,000%20crore..