மணி திருநாவுக்கரசு முதலியார்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மணி திருநாவுக்கரசு முதலியார் |
---|---|
பிறந்ததிகதி | 1888 |
இறப்பு | 1931 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931)[1] தமிழறிஞரும், நூலாசிரியரும் ஆவார்.
இவர் செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுந்தர முதலியார் என்பவரின் புதல்வர். இவர் பூவை கல்யாணசுந்தர முதலியார், மறைமலை அடிகள் ஆகியோரின் மாணாக்கர். கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரானார்.[1]
செந்தமிழ்ச் செல்வி, தமிழரசு ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] தமிழர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.[2]
இலக்கியவாழ்க்கை
மணி திருநாவுக்கரசு சைவம் சார்ந்தும் தமிழிலக்கியம் சார்ந்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். நூல்களை உரையெழுதி பதிப்பித்தார்.நூல்களைத் தொகுத்தார். கல்லூரியிலும் தன் இல்லத்திலும் தமிழ் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்குக் கற்பித்தார். மணி திருநாவுக்கரசு திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்புகளில் ஆசிரியராக பணியாற்றினார். சேலை சகதேவ முதலியார் முதலியோரை கொண்டு தமிழ்ப்பாடநூல்களை எழுதச்செய்து வெளியிட்டார். மணி திருநாவுக்கரசு தனித்தமிழ் இயக்க ஆதரவாளர்.
அமைப்புகள்
சைவத்தையும் தமிழையும் பரப்பும்பொருட்டு மணி திருநாவுக்கரசு உருவாக்கிய அமைப்புகள்
- பாலசைவர் சபை
- வாகீசர் சபை
- மாணிக்கவாசகர் சபை
- இந்துமத பாடசாலை
- சித்தாந்த பிரகாச சபை
- தமிழர் சங்கம்
இதழியல்
மணி திருநாவுக்கரசு திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் இணைந்து செந்தமிழ்ச் செல்வி இதழின் உருவாக்கத்திலும் வெளியீட்டிலும் ஈடுபட்டார்
மாசிலாமணி முதலியாருடன் இணைந்து தமிழரசு இதழை நடத்தினார்
இலக்கிய இடம்
மணி திருநாவுக்கரசு தமிழ்க்கல்வி, தமிழ்வழிக்கல்வி ஆகியவற்றுக்கான பாடநூல்களை உருவாக்கியவர் என்னும் அளவில் முதன்மையாக மதிக்கப்படுகிறார்.
நூல்கள்
- பாவலர் ஆற்றுப் படை
- அறநெறி விளக்கம்[3]
- புலவர் கதை
- திருக்கண்ணப்பன்
- குமணன்[4]
- இராசராசன்
- சண்பகவல்லி
- செந்தமிழ் வாசகம்
- பட்டினத்துப் பிள்ளையார் அல்லது தவராசர்[5]
தொகுப்பு
- பாமணிக் கோவை
- உரைமணிக் கோவை
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "அடிகளார் படிவ மலர் 1969". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
- ↑ "தமிழர் சங்கம் 07.07.1929". விடுதலை. Archived from the original on 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
- ↑ அறநெறி விளக்கம் - Catalogue SUDOC (abes.fr)
- ↑ குமணன் - Catalogue SUDOC (abes.fr)
- ↑ பட்டினத்துப் பிள்ளையார் அல்லது தவராசர் - தமிழ் இணைய நூலகம் (tamildigitallibrary.in)