மணிப்பூர் மாமியார்
Jump to navigation
Jump to search
மணிப்பூர் மாமியார் | |
---|---|
இசைத்தட்டு அட்டை | |
இயக்கம் | வி. சி. குகநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகுமார் ஜெயலலிதா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணிப்பூர் மாமியார் (Manipoor Maamiyaar) என்பது வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் விஜயகுமார், ஜெயலலிதா, சுருளி ராஜன், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தை ரகுராம், வி. சி. குகநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.
1982 ஆண்டில் மணிப்பூர் மாமியார் தயாரிக்கபட்டது. படத்தின் படப்பிடிப்புகள் நடந்து 9000 அடி எடுத்த நிலையில் படம் பாதியில் நிறுத்தபட்டது.[1]
இசை
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]
பாடல் | பாடகர்கள் | வரிகள் | நிமிடங்கள் |
---|---|---|---|
"ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே"[3] | எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் | முத்துலிங்கம் | 4:29 |
"கூத்தாடி கூத்தாடி" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 2:27 |
"மணிப்பூர் மாமியார்" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 4:40 |
"ரசிகனே என் அருகில் வா" | எஸ். பி. சைலஜா, இளையராஜா | கங்கை அமரன் | 5:02 |
"சமையல் பாடமே" | எஸ். பி. சைலஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | 5:49 |
குறிப்புகள்
- ↑ மலர், மாலை (2017-02-11). "ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்" (in en). https://www.maalaimalar.com/cinema/cinehistory/2017/02/11221339/1067754/cinima-history-vijayakumar.vpf.
- ↑ "மணிப்பூர் மாமியார்" (in ta). https://spicyonion.com/tamil/movie/manipoor-maamiyaar/.
- ↑ "மனத்திரையில் மட்டும் காட்சிப் படிமங்களாக நீந்தும் இளையராஜாவின் 10 பாடல்கள் - Ilayaraja Birthday Special" (in ta). 2023-06-02. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1000362-unpicturised-songs-of-ilayaraja.html.