மணப்படைவீடு
Jump to navigation
Jump to search
மணப்படைவீடு என்ற கிராமம் தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், திருவலஞ்சுழி ஊராட்சியில் உள்ளது. இது மணப்படையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பு
இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்கது. இராசராச சோழனின் படைவீடுகளில் ஒன்று. இது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தில்[1] குறிப்பிடப்பட்டுள்ளது. இராசராசனின் படையில் உள்ள படைவீரர்கள் குடி இருந்த ஊர்கள் படைவீடுகள் என அழைக்கப்பட்டன.
பிற படைவீடுகள்
மணப்படைவீட்டை சுற்றி உள்ள பிற படைவீடுகள் பின்வருமாறு, புதுப்படைவீடு, பம்பப்படைவீடு, ஆரியப்படைவீடு.