மட சாம்பிராணி
Jump to navigation
Jump to search
மட சாம்பிராணி | |
---|---|
இயக்கம் | எஸ். என். ரங்கநாதன் |
தயாரிப்பு | ஏ. நாராயணன் சீனிவாஸ் சினிடோன் |
நடிப்பு | புலியூர் துரைசாமி ஐயங்கார் பி. எஸ். ராமுடு ஐயர் கே. வி. சுவர்ணப்பா பி. டி. சுந்தரி கே. கமலா வி. பொன்னம்மாள் |
விநியோகம் | ஏ. எல். ஆர். எம். கம்பனி, மதராசு |
வெளியீடு | ஏப்ரல் 8, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 13750 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மட சாம்பிராணி, 1938 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணனின் சீனிவாஸ் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில், எஸ். என். ரங்கநாதன் இயக்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்தில் புலியூர் துரைசாமி ஐயங்கார், பி. எஸ். ராமுலு ஐயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
திரைக்கதை
ராமுலு-சீனு என்ற இரண்டு நடிகர்கள் இத்திரைப்படத்தில் கிச்சு, பிச்சு[1] என்ற நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தனர். நகரத்தின் நாகரீக மோகத்தில் சிக்கி, இவ்விருவரும் தங்கள் பூணூல்களைக் கழற்றி எறிந்துவிடுவார்கள். இறுதியில் மீண்டும் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள். இந்த நகைச்சுவைப் படம், அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2]