மகேஷி ராமசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகேஷி ராமசாமி
பிறப்பு
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்இலங்கை - பிரித்தானியர்
Alma materகிறிஸ்ட் கல்லூரி, கேம்பிரிட்ஜ், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
வாதாம் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
அறியப்பட்டதுஅறிவியலாளர்

மகேஷி என். ராமசாமி, இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய மருத்துவரும், விரிவுரையாளருமாவார். இவர் தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் தலைமை புலனாய்வாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். [1]

வரலாறு

இலங்கையைச் சார்ந்த தமிழரும், அவுஸ்திரேலிய கல்வியாளரும் அறிவியலாளருமான, ரஞ்சன் ராமசாமி மற்றும் சிங்கள இனத்தைச் சார்ந்த சமரநாயக் என்ற மந்திரி ராமசாமி இவரது பெற்றோர் ஆவர். இருவருமே புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆவர். [2]

தொழில்

மருத்துவக் கல்வியை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ், கிறிஸ்ட் கல்லூரியில் முடித்துள்ள மகேஷி  லண்டன், ஆக்ஸ்போர்டில் தொற்று நோய்கள் மற்றும் பொது உள் மருத்துவத்தில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் [3] ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். [4]

இவர் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் NHS அறக்கட்டளையில் ஆலோசக மருத்துவராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டலன் கல்லூரியில் மூத்த கௌரவ மருத்துவ விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார். [4]

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் இவர், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த நோயெதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கிய குழுவில் பணியாற்றியுள்ளார்.[5][6]

வளர்ச்சி நிலையில் உள்ள கோவிட் தடுப்பூசியின் மருத்துவ நடைமுறை குறித்து பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இவரின் பங்களிப்பைக் குறிப்பிடப்பட்டு அங்கீகரித்துள்ளது. [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மகேஷி_ராமசாமி&oldid=24067" இருந்து மீள்விக்கப்பட்டது