மகா சின்னத்தம்பி
மகா சின்னத்தம்பி | |
---|---|
2015இல் சின்னத்தம்பி | |
பிறப்பு | 10 திசம்பர் 1939 இரண்டாவ், நெகேரி செம்பிலன், மலேசியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் |
பணி |
|
வாழ்க்கைத் துணை | யோகா (தி. 1968) |
பிள்ளைகள் | 4 |
மகா சின்னத்தம்பி (Maha Sinnathamby) (பிறப்பு: திசம்பர் 10, 1939 மலேசியாவின் இரண்டாவ் கிராமம் ) ஒரு ஆஸ்திரேலிய தொழிலதிபரும் சொத்து உருவாக்குநருமாவார்.[2] ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் மிகப்பெரிய வீடுகட்டும் திட்டமான "கிரேட்டர் ஸ்பிரிங்ஃபீல்ட்" என்ற திட்டத்தின் மேம்பாட்டுக்கு பின்னால் இவர் இருக்கிறார்.[3]
2019ஆம் ஆண்டில், இவரது இசுபிரிங்ஃபீல்ட் சிட்டி குழுமம் குயின்ஸ்லாந்து வர்த்தக தலைவர்கள் அமைப்பில் சேர்க்கப்பட்டது. பின்னர், ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் கட்டப்பட்ட நகரமானது.[4]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
திசம்பர் 10, 1939இல் மலேசியாவில் பிறந்த மகா சின்னத்தம்பி இலங்கை தமிழராவார் இவரது குழந்தைப் பருவம் சிறிய விவசாய கிராமமான இரன்டாவிலுள்ள பிரித்தானியருக்குச் சொந்தமான இரப்பர் தோட்டத்தில் கழிந்தது. இவரது தந்தை அந்தத் தோட்டத்த்தில் பணிபுரிந்தார். ஜூலை 1944 இல் மலேசியா மீது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது போர்க் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு, செப்டம்பர் 1945 இல், விடுவிக்கப்பட்டார்.[5]
இவர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியியல் படித்தார். பட்டம் பெற்ற பிறகு, தென்கிழக்கு ஆசியாவில் கட்டிடப் பொறியியல் மற்றும் வடிவமைப்பு பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.[6]
வணிக வாழ்க்கை
1980களின் முற்பகுதியில் குயின்ஸ்லாந்திற்குச் செல்வதற்கு முன்பு 1971ஆம் ஆண்டில் பெர்த்தில் தனது சொந்த சொத்து வணிகத்தைத் தொடங்கினார். இவர் பிராந்தியத்தில் ஏராளமான சிறிய குடியிருப்பு துணைப்பிரிவுகள் மற்றும் பல வணிக திட்டங்களுடன் நிறுவனத்தை கட்டியெழுப்பினார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
1968ஆம் ஆண்டில் இவர் யோகா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேணுகா, மீரா, உமா என்ற மூன்று மகள்களும், நரேன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Maha Sinnathamby ... the man behind Australia's largest master-planned community" இம் மூலத்தில் இருந்து 19 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110719164931/http://www.property-report.com/site/malaysia-property-news-malaysian-born-developer-4th-richest-in-ql-4594.
- ↑ Schmidt, Lucinda (27 January 2016). "Australia's 50 Richest People" இம் மூலத்தில் இருந்து 27 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160627214854/http://www.forbes.com/profile/maha-sinnathamby/.
- ↑ "Greater Springfield named Australia's best master planned development – Greater Springfield". 20 March 2015 இம் மூலத்தில் இருந்து 13 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160513110451/http://www.greaterspringfield.com.au/2015/03/news/greater-springfield-named-australias-best-master-planned-development/.
- ↑ "2019 Hall of Fame". State Library of Queensland. 2019 இம் மூலத்தில் இருந்து 19 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190719030759/http://leaders.slq.qld.gov.au/inductees/.
- ↑ McCreadie, Karen (31 July 2012) (in en). Stop Not Till the Goal is Reached: The 10 Principles for Fearless Success That Inspired Maha Sinnathamby to Build a City. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781742468587. https://books.google.com/books?id=oEGHA6HpbEgC.
- ↑ 6.0 6.1 McCreadie, Karen (31 July 2012) (in en). Stop Not Till the Goal is Reached: The 10 Principles for Fearless Success That Inspired Maha Sinnathamby to Build a City. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781742468587. https://books.google.com/books?id=oEGHA6HpbEgC.McCreadie, Karen (31 July 2012).
- ↑ Stop Not Till the Goal is Reached: The 10 Principles for Fearless Success That Inspired Maha Sinnathamby to Build a City. https://books.google.com/books?id=oEGHA6HpbEgC.McCreadie, Karen (31 July 2012).
மேலும் படிக்க
- McCreadie, Karen (2012), Stop not till the goal is reached : the 10 principles for fearless success that inspired Maha Sinnathamby to build a city, Milton, Qld. John Wiley & Sons Australia, ISBN 978-1-74246-856-3