மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில்
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவு: | நுங்கம்பாக்கம் |
ஏற்றம்: | 34 m (112 அடி) |
ஆள்கூறுகள்: | 13°03′23.0″N 80°13′54.5″E / 13.056389°N 80.231806°ECoordinates: 13°03′23.0″N 80°13′54.5″E / 13.056389°N 80.231806°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
இணையதளம்: | www.ayyappantemplesabs.org |
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் அல்லது மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில்கள் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் மகாலிங்கபுரம் என்ற இடத்தில்,[1] 13°03′23.0″N 80°13′54.5″E / 13.056389°N 80.231806°E (அதாவது, 13.056400°N, 80.231800°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் ஐயப்பன் கோயிலாகும். இக்கோயில் வளாகத்தில் ஐயப்பன் கோயில், குருவாயூரப்பன் கோயில் என்று இரண்டு கோயில்கள் உள்ளன. இக்கோயிலானது, கேரள பாரம்பரிய பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்கரத்தின் மீது சின்முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் நெய்யபிசேகப் பூசை நடைபெறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்பன் மாலை அணிந்து, அதற்குண்டான விரதங்களை, தொடர்ச்சியாக 41 நாட்கள் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் சுவாமியைத் தரிசனம் செய்ய, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்து வரும் வழக்கத்தில், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலிலும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர், சபரிமலை ஐயப்பன் சுவாமியைத் தரிசனம் செய்வதற்காக.[2] ஒவ்வோர் ஐயப்பன் கோயிலிலும், தத்துவமஸி என்று ஒரு குறிப்பு காணப்படும். தத்+துவம்+அஸி என்று அறியப்படும் அந்தக் குறிப்பானது, 'நீ எதைத் தேடி வந்தாயோ, அதுவாகவே நீ இருக்கிறாய்' என்று பொருள்படும். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகத் தன்மை நிரம்பியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும் என்பதின் சாராம்சம் அது.
சன்னதிகள்
ஐயப்பன் சன்னதி, சிவன் சன்னதி, பகவதி சன்னதி, கணபதி சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கியமான சன்னதிகளாகும்.
திருவிழாக்கள்
இக்கோயிலில், கோகுலாஷ்டமி[3] மகர சங்கராந்தி, சித்திரை விஷூ, கார்த்திகை மாதம் முதல் நாள் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ Infokerala Communications Pvt Ltd (2017-09-01). Pilgrimage to Temple Heritage 2017 (in English). Info Kerala Communications Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-934567-0-5.
- ↑ "ஐயப்பன் கோயில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
- ↑ பெ, ராகேஷ். "சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்; கிருஷ்ணா, ராதை கெட்டப்பில் சுட்டீஸ்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.