ப. சு. இராமன்
பட்டாபி சுந்தர இராமன் | |
---|---|
பிறப்பு | 7 நவம்பர் 1960 இந்தியா, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | மூத்த வழக்கறிஞர் |
அறியப்படுவது | தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் |
பட்டாபி சுந்தர இராமன் (P. S. Raman)(பிறப்பு: நவம்பர் 7, 1960) என்பவர் ஒரு இந்திய மூத்த வழக்கறிஞரும், தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞரும் ஆவார். இவர் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும் திராவிட முனேற்றக் கழக அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் இளைய மகன் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
பட்டாபி சுந்தர இராமன் 1960 நவம்பர் 7 அன்று பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞர் வி. பி. ராமன் ஆவார், வி. பி. இராமன் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். [1] [2] பி. எஸ். இராமனின் அண்ணன் பிரபல நடிகரான மோகன் வி. ராமன் ஆவார்.
சுந்தர இராமன் தனது பள்ளிப்படிப்பை சென்னை வித்யா மந்திரில் முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் வணிவியலில் பட்டம் பெற்றார். [1] பின்னர் இராமன் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் மயின்று பட்டம் பெற்றார். [2]
தொழில்
இராமன் 1985 இல் ஒரு வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார் [1] மற்றும் 1991 இல் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு இராமன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். [2] இராமன் சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொண்டார். [2] 2004 செப்டம்பரில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியமர்ந்தார். [1] தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர் முத்துசாமி பதவி விலகியதையடுத்து, 2006 சூன் 11 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்கு பதிலாக ராமன் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். [3] தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஜி. மாசிலாமணி பதவி விலகியதையடுத்து, ராமன் 2009 சூலை 29 அன்று தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆனார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Raman appointed Advocate-General". தி இந்து. July 30, 2009 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 8, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108082249/http://www.hindu.com/2009/07/30/stories/2009073054210400.htm.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Raman named new Advocate-General". டெக்கன் குரோனிக்கள். July 30, 2009. http://www.deccanchronicle.com/chennai/raman-named-new-advocate-general-181.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Government appoints three additional Advocate-Generals". The Hindu. June 11, 2006 இம் மூலத்தில் இருந்து ஜூன் 16, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060616083633/http://www.hindu.com/2006/06/12/stories/2006061206360400.htm.