ப. சரவணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ப. சரவணன்
ப. சரவணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ப. சரவணன்
பிறந்ததிகதி சூலை 31, 1973 (1973-07-31) (அகவை 51)
பிறந்தஇடம் மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம் , தமிழ்நாடு , இந்தியா
பணி உதவி இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தேசியம் இந்தியர்
கல்வி M.A.,M.Phil,PH.D.
அறியப்படுவது நூலாசிரியர், பதிப்பாசிரியர்
செயற்பட்ட ஆண்டுகள் 1973-present
செயற்பட்ட ஆண்டுகள் 1973-present
குறிப்பிடத்தக்க விருதுகள் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமிழ்ப் பரிதி விருது, வா.செ .குழந்தைசாமி விருது (2021).
பெற்றோர் தந்தையார்: திரு.பழனிச்சாமி, தாயார்: திருமதி .பிரேமாவதி
துணைவர் திருமதி.தேவிசரவணன்
பிள்ளைகள் ச.இரவிவர்மன்

ப. சரவணன் (பிறப்பு: 31 சூலை 1973) ஒரு எழுத்தாளர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், திறனாய்வு, சுவடியியல், பதிப்பியல், உரை எழுதுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.[1][2] தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார். சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி, பின்னர் 2022 சனவரி முதல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2002) உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[3]

ஆய்வு நூல்கள்

  • அருட்பா X மருட்பா (2001)
  • கானல் வரி ஒரு கேள்விக்குறி (2004)
  • வாழையடி வாழையென (2009)
  • நவீன நோக்கில் வள்ளலார் (2010)

பதிப்புகள்

  • ஔவையார் கவிதைக் களஞ்சியம் (2001)
  • மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் (ஆறு தொகுதிகள், 2001)
  • நாலடியார் 1892 (2004)
  • மநு முறைகண்ட வாசகம் 1854 (2005)
  • வேங்கடம் முதல் குமரி வரை (2009)
  • அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு (2010)
  • கமலாம்பாள் சரித்திரம் (2011)
  • சாமிநாதம்: உ.வே.சா.முன்னுரைகள் (2014)
  • உ.வே.சா. கட்டுரைகள் -5 தொகுதிகள் (2016)
  • தாமோதரம்: சி.வை.தா. பதிப்புகள் (2017)
  • உ.வே.சா.வின் என் சரித்திரம் (2017)

உரைகள்

விருதுகள்

  • ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு - முதுகலைப்படிப்பு - சென்னைப் பல்கலைக் கழகம் (1998)
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - சிறந்த நூல் - அருட்பா X மருட்பா (2002)
  • தமிழ்ப்பரிதி விருது (2005)
  • சுந்தரராமசாமி விருது (2013)
  • தமிழ்நிதி விருது - சென்னைக் கம்பன் கழகம் (2014)
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை விருது - சென்னைக் கம்பன் கழகம் (2016)
  • நாஞ்சில்நாடன் விருது - சிறுவானி வாசகர் மையம் (2019)
  • டாக்டர் வா. செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது (2021)

மேற்கோள்கள்

  1. ஷங்கர்ராமசுப்ரமணியன். ஆய்வுப் பணியே என் வாழ்நாள் பணி - ப. சரவணன் சிறப்புப் பேட்டி. தி இந்து தமிழ் திசை. {{cite book}}: Unknown parameter |day= ignored (help)
  2. "ப. சரவணன் படைப்புகள்".
  3. தமிழியல் ஆய்வாளர் ப. சரவணன், தென்றல், திசம்பர் 2020
"https://tamilar.wiki/index.php?title=ப._சரவணன்&oldid=4947" இருந்து மீள்விக்கப்பட்டது