ப. சத்தியலிங்கம்
பி. சத்தியலிங்கம் P. Sathiyalingam | |
---|---|
இலங்கை, வட மாகாண சபை சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 11 அக்டோபர் 2013 | |
வவுனியா மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 11 அக்டோபர் 2013 | |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | மருத்துவர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பத்மநாதன் சத்தியலிங்கம் (Pathmanathan Sathiyalingam) இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சத்தியலிங்கம் வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் எஸ். பத்மநாதனின் மகன் ஆவார்.[1] மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். சட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளிலும், திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுச் செயல்பாடுகளிலும் வங்காள தேசம், பிலிப்பைன்சு, சப்பான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார்.[2][3][4]
அரசுப் பணி
சத்தியலிங்கம் வவுனியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய வைத்திய அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளைத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[5][6]
அரசியலில்
சத்தியலிங்கம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 19,656 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[7][8]
இவர் வட மாகாண சபையின் சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு[9][10] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[11][12]
மேற்கோள்கள்
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (5 அக்டோபர் 2013). "TNA's Tussle Over Provincial Ministry Posts in North". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/36606-tnas-tussle-over-provincial-ministry-posts-in-north.html.
- ↑ Jayasuriya, Srinath Prasanna (24 செப். 2003). "Get back: LTTE orders striking health workers in North East". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013155235/http://archives.dailymirror.lk/2003/09/24/frontpage/2.html.
- ↑ "District Tobacco Control Cell – Vavuniya". Regional Director of Health Services - Vavuniya இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013155242/http://vavuniyahealth.org/Detailevent.asp?eid=81.
- ↑ "Tamil Civil Society Memo to the TNA regarding the Eastern Provincial Council Elections". தமிழ் கார்டியன். 29 சூலை 2012. http://tamilguardian.com/article.asp?articleid=5400.
- ↑ "Sri Lanka Red Cross Regional Operation and Coordinating Office ( ROCO) opened in Vavuniya". Sri Lanka Red Cross Society இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013155159/http://beta.redcross.lk/old_site/eh_news170.html.
- ↑ "Contact Directory Northern Province". மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம். 18 செப். 2013. p. 157 இம் மூலத்தில் இருந்து 2013-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017115532/http://www.hpsl.lk/Files/Contact%20Directory/LKE0779_North%20Contact%20Directory%202013.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734.
- ↑ "Sri Lanka's first Tamil CM announces Cabinet". தி நியூ இந்தியன் எக்சுபிரசு/பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 10 அக்டோபர் 2013. http://newindianexpress.com/world/Sri-Lankas-first-Tamil-CM-announces-Cabinet/2013/10/10/article1829560.ece.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்ஸ். 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.