போத்தனூர் தபால் நிலையம்
போத்தனூர் தபால் நிலையம் Pothanur Thabal Nilayam | |
---|---|
இயக்கம் | பிரவீன் |
தயாரிப்பு | சுதன் சுந்தரம் ஜி.ஜெயராம் |
இசை | தென்மா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சுகுமாரன் சுந்தர் |
படத்தொகுப்பு | பிரவீன் |
கலையகம் | பேசன் கலைக்கூடம் |
வெளியீடு | மே 27, 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
போத்தனூர் தபால் நிலையம் (Pothanur Thabal Nilayam) பிரவீன் எழுதி இயக்கிய 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். பிரவீன், அஞ்சலி ராவ் மற்றும் வெங்கட் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- பிரவீனாக பிரவீன்
- அஞ்சலி ராவ்
- வெங்கட் சுந்தர்
- ஜெகன் கிரிஷ்
- சீதாராமன்
- தீனா அங்கமுத்து
- சம்பத் குமார்
கதை
போத்தனூர் தபால் நிலையத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் செலுத்தப்படுகிறது. பணம் அங்கு இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்றெண்ணி, அந்த பணத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார் நாயகன் பிரவீனின் தந்தை. செல்லும் வழியில் அந்த பணத்தை தவறவிட்டுவிடுகிறார். சனிக்கிழமை என்பதால், திங்கட்கிழமை கட்டாயம் 7 லட்சம் ரூபாயை தபால்நிலையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் சிறைக்கு செல்லும் நிலை வந்துவிடுமே என்றெண்னி புலம்புகிறார் பிரவீனின் தந்தை. தந்தையை காப்பாற்ற பணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்குகிறார் பிரவீன். பணம் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதுதான் மீதிக் கதை.
தயாரிப்பு
பிரவீன் வெங்கடராமன் 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போத்தனூர் தபால் நிலையத்தை எழுதத் தொடங்கினார். 1990 ஆம் ஆண்டுகளை பின்னணியாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. 1886 [1] ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கோயம்புத்தூரில் உள்ள பழமையான மற்றும் முதல் தபால் நிலையமான போத்தனூர் தபால் நிலையம் கதையின் மையமாகும்.
வால்ட் டிசுனி பிக்சர்சு நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குனராக பணிபுரிந்ததன் மூலம் இயங்குபடத்தில் அனுபவம் பெற்ற பிரவீன், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் (2014) படத்தின் தொழில்நுட்ப இயக்குநராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் போத்தனூர் தபால் நிலையத்தின் தயாரிப்பு பணி தொடங்கியது, பிரவீன் தனக்கு உதவ கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம் குறும்பட தயாரிப்பாளர்களின் தொழில்நுட்பக் குழுவை ஒன்றிணைத்தார். இத்திரைப்படம் பிரவீனின் சொந்த கலைக்கூடமான சைக்கிள் சினிமாசின் கீழ் தொடங்கப்பட்டது. திரைப்படம் முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. [2] கோயம்புத்தூர் நகர அரங்கில் தபால் அலுவலகம் போல் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. [3] இப்படம் தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் படமாக்கப்பட்டது. [4]
2021 நவம்பர் மாதத்தில் பேசன் கலைக்கூடம் படத்தை வாங்கியது. படத்தை ஒரு முத்தொகுப்பாக உருவாக்கும் நோக்கத்தை அறிவித்தது. [5] [6]
வரவேற்பு
திரைப்படம் 27 மே 2022 அன்று ஆகா தளத்தில் வெளியிடப்பட்டது. சினிமா எக்சுபிரசு படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தது.[7] தி இந்து பத்திரிகையிடம் நடுநிலையான விமர்சனத்தைப் பெற்றது. [8]
இதற்கு நேர்மாறாக, இந்தியா கிளிட்சு திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தது. [9] அதேபோல், நியூசுடுடேயும் படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்துள்ளது. [10] பிகைண்டு வுட்சு.காம் தளமும் திரைப்படத்தைப் பாராட்டியது.[11]
மேற்கோள்கள்
- ↑ "A new film 'Podanur Thabaal Nilayam' turns the spotlight on Podanur Post Office, the oldest and the first post office in Coimbatore". The Hindu. Archived from the original on 2022-05-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Pothanur Post Office". FilmFreeway. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Suspense in the post office". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Praveen's suspense thriller Pothanur Thabal Nilayam, set in a post office, will be a trilogy | Tamil Movie News". Times of India. Archived from the original on 2022-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Passion Studios' next production to be trilogy titled 'Pothanur Thabal Nilayam'". The New Indian Express. Archived from the original on 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Passion Studios' next production to be trilogy titled 'Pothanur Thabal Nilayam'". TechiLive.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Pothanur Thabal Nilayam Movie Review: Few saving graces in a majorly amateurish attempt". Cinema express. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ Hindu Tamil. "முதல் பார்வை | போத்தனூர் தபால் நிலையம் - வழிமாறிய வித்தியாசமான த்ரில்லர்! | Pothanur Thabal Nilayam movie review". hindutamil.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Pothanur Thabal Nilayam review. Pothanur Thabal Nilayam Tamil movie review, story, rating". IndiaGlitz.com. Archived from the original on 2022-05-30. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Pothanur Thabal Nilayam - Review - News Today | First with the news". newstodaynet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
- ↑ "Pothanur Thabal Nilayam (aka) Pothanur Thabal Nilayaam review". behindwoods.com. Archived from the original on 2022-05-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.