பொல்காவலை
Jump to navigation
Jump to search
பொல்காவலை
Polgahawela පොල්ගහවෙල | |
---|---|
நாடு | இலங்கை |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை) |
இணையதளம் | www |
பொல்காவலை (Polgahawela) இலங்கையின் வடமேற்கே உள்ள ஒரு நகரமாகும். இலங்கையின் முக்கிய தொடருந்துப் பாதைகளின் சந்தி இங்கு அமைந்துள்ளது.
பொல்காவலை வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 80கிமீ (50 மைல்) தொலைவிலும், கண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும், குருநாகலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது.
தொடருந்து நிலையம்
பொல்காவலை தொடருந்து நிலையம் பொல்காவலை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையின் மலையகத்திற்கும், வடக்கிற்கும் செல்லும் தொடருந்துகள் இங்கு பிரிகின்றன.[1]
- இலங்கைத் தொடருந்துப் போக்குவரத்தின் முக்கிய பாதை பொல்காவலையூடாக கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய நகரங்களுக்கு செல்கிறது.
- வடக்குப் பாதை அனுராதபுரம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற நகரங்களுக்கு செல்கிறது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- மால்கம் ரஞ்சித், கொழும்பு பேராயர், கர்தினால்
மேற்கோள்கள்
- ↑ ""Sri Lanka Railways Timetable"". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-28.