பொருத்த விளக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொருத்த விளக்கம் என்னும் இந்த நூலை நாகூர் தர்கா மகாவித்துவான் ஸ்ரீலஸ்ரீ குலாம் காதிறு நாவலர் என்பவர் இயற்றினார். ஆ.கா.பிச்சை இபுறாகிம் என்பவர் இந்த நூலுக்குப் பாயிரம் பாடியுள்ளார். 1880ல் அரங்கேற்றப்பட்ட இந்த நூல் 1900 ஆண்டில் செய்யது இபுறாகிம் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

பிற்காலப் பாட்டியலின் ஒரு பகுதி எழுத்துப் பொருத்தம். ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை எழுத்துப்பொருத்தம்.

பாட்டுடைத் தலைவன் பெயருக்குப் பொருத்தமான எழுத்தில் தொடங்கிப் பாடவேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறும். பாட்டுடைத் தலைவன் பிறந்த நாள் நட்சத்திரம் எழுத்துப் பொருத்தத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். நூல் சில மங்கலச் சொற்களில் தொடங்கப்பட வேண்டும் என்றும் பாட்டியல் நூல்கள் கூறும்.

பொருத்த-விளக்கம் என்னும் இந்த நூல் 18 மெய்யெழுத்துக்களை 4 வருணத்தாருக்கு உரியனவாகப் பிரித்துக் காட்டுகிறது. தமிழ் எழுத்துக்களை 27 நட்சத்திரமாகவும் பிரித்துக் காட்டுகிறது.

அ ஆ இ ஈ – கார்த்திகை
உ ஊ எ ஏ ஐ – பூராடம்
ஒ ஓ ஔ – உத்தராடம்

இப்படியெல்லாம் ஒரு கற்பனை செய்கிறது இந்த நூல்.

"https://tamilar.wiki/index.php?title=பொருத்த_விளக்கம்&oldid=13388" இருந்து மீள்விக்கப்பட்டது