பொதுவியல் திணை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொதுவியல் திணை புறத்திணைகள் ஒன்பதிலும் வகைப்படுத்த முடியாத பாடல்களான அறம் கூறும் பாடல்களையும், அறிவு கூறும் பாடல்களையும் உள்ளடக்கியது. புறத்திணைகளுள் வெட்சி, கரந்தைத் திணைகள் பசுக்களை கவர்தல், அவற்றை மீட்டல் எனவும், வஞ்சி, காஞ்சித் திணைகள் பகைவர் நாட்டின்மேல் படையெடுத்தல், அவர்களை நாட்டுள் விடாமல் தடுத்தல் எனவும், உழிஞை, நொச்சித்திணைகள் மதிலை வளைத்தல், அதைக் காத்தல் என அமைந்து எதிர் எதிர் திணைகளாக அமைந்திருத்தல் சிறப்புடையது. அடுத்துக் கூறப்படும்தும்பைப் போர்முறை, இடம், நாள், நேரம் குறித்துச் செய்யப்படும் அறப்போராக வீரம் விளைய நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியைப் பாராட்டுதல் வாகை என்பதோடு அமையாமல், தோற்றவர் பக்கத்தும் வீரம் வெளிப்பட போர் செய்தவர்களையும் சிறப்பித்து, பொதுவான வீரம், கொடை இவற்றைப் பேசும் பாடாண் திணை. தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

"https://tamilar.wiki/index.php?title=பொதுவியல்_திணை&oldid=14156" இருந்து மீள்விக்கப்பட்டது