பொதுக்கயத்துக் கீரந்தை
Jump to navigation
Jump to search
பொதுக்கயத்துக் கீரந்தை சங்ககாலப் புலவர். இவரது பாடலாகக் குறுந்தொகை 337 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது.
கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.
பாடல் சொல்லும் செய்தி
இவள் பெருமுது செல்வர் பலருக்கு ஒரே ஒரு மகள். இவள் உலகம் அறியாத மடமைப் பண்பினள். இவளது முலை முகிழ்முகிழ்த்தது. கிளி போன்ற குரல் மாறிக் கிழக்கு வீழ்த்தது. அடித்தொண்டைக்கண்ணதாயிற்று பல் விழுந்து முளைத்து வரிசைப்பட்டுள்ளன. உடலைச் சில wikt:சுணங்குகள் அழகுபடுத்துகின்றன. இவற்றையெல்லாம் நான் அறிவேன். அவளுக்குத் தெரியாது. என்ன ஆவாளோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீ வேறு அவளைத் தரும்படி கெஞ்சுகிறாய். நான் என்ன செய்வேன்? - குறை இரக்கும் தலைவனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.