பேய்லைட்டு
| பேய்லைட்டு Bayleyite | |
|---|---|
| படிமம்:Bayleyite-mrz186a.jpg நியூமெக்சிகோவின் அம்புரோசியா ஏரியில் கிடைத்த பேய்லைட்டு கனிம மாதிரி (அளவு: 4.6 × 2.4 × 1.6 cm) | |
| பொதுவானாவை | |
| வகை | கார்பனேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Mg2(UO2)(CO3)3·18(H2O) |
| இனங்காணல் | |
| நிறம் | கந்தக மஞ்சள் |
| படிக இயல்பு | பட்டகப் படிகங்களின் கொத்துகள், மேலோடுகள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| முறிவு | சங்குருவம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2–2.5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| ஒளிஊடுருவும் தன்மை | அரை ஒளி ஊடுருவும் |
| ஒப்படர்த்தி | 2.05 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (−) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.453 – 1.455 nβ = 1.490 – 1.492 nγ = 1.498 – 1.502 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.045 – 0.047 |
| பலதிசை வண்ணப்படிகமை | புலப்படும்: X = இளஞ்சிவப்பு, Y = இளம் மஞ்சள், Z = இளம் மஞ்சள் |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 30° |
| புறவூதா ஒளிர்தல் | பலவீனம்; மஞ்சள்-பச்சை முதல் வெளிர் பச்சை வரை |
| பிற சிறப்பியல்புகள் | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: கதிரியக்கம் |
| மேற்கோள்கள் | [1][2][3] |
பேய்லைட்டு (Bayleyite) என்பது Mg2(UO2)(CO3)3·18(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனியம் கார்பனேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. பேய்லைட்டு கனிமம் மக்னீசியம், யுரேனியம் மற்றும் கார்பன் ஆகிய தனிமங்களைக் கொண்ட இரண்டாம் நிலை கனிமமாகும். பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இது காணப்படுகிறது. இதன் படிகப் பழக்கம் ஊசிவடிவமாகும். ஆனால் இது பொதுவாக யுரேனியம் தாங்கும் தாதுக்களின் மேலோடுகளாகக் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் சுமார் 2–2.5 என்ற கடினத்தன்மையைக் பேய்லைட்டு கனிமம் கொண்டுள்ளது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பேய்லைட்டு கனிமத்தை Byy[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
முதன்முதலில் பேய்லைட்டு கனிமம் 1948 ஆம் ஆண்டு அரிசோனாவின் யாவாபாய் மாகாணத்தில் உள்ள பாக்தாத்தின் வடக்கே உள்ள இல்சைடு சுரங்கத்தில் கிடைத்ததாக விவரிக்கப்பட்டது. மேலும் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தின் கனிமவியலாளர் வில்லியம் செர்லி பேய்லி (1861–1943) என்பவரின் நினைவாக பேய்லைட்டு எனப் பெயரிடப்பட்டது. மற்ற இரண்டாம் நிலை கனிமங்களில் ஒரு மலர்ச்சி அல்லது பூச்சாக இது தோன்றுகிறது. பெரும்பாலும் சுரங்கச் சுவர்கள் மற்றும் வேலைப்பாடுகளில் படிந்து காணப்படுகிறது. இல்சைடு சுரங்கத்தில் சுரோக்கிங்கரைட்டு, ஆண்டர்சோணைட்டு, சிவார்ட்சைட்டு மற்றும் ஜிப்சம் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. உட்டாவில் உள்ள ஐட்வுட்டு சுரங்கத்தில் சுரோக்கிங்கரைட்டு மற்றும் ஜிப்சம் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. வயோமிங்கில் உள்ள நதிப் படுகையில் தியுயாமுனைட்டு, யுரேனோஃபேன், இலிபிகைட்டு மற்றும் கார்னோடைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Bayleyite on Mindat.org
- ↑ Bayleyite on Webmineral
- ↑ 3.0 3.1 Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.