பெ. நா. அப்புசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்

படைப்புகள்

பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]

மொழிபெயர்ப்புகள்

அறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.


1. சுதந்திரத் தியாகிகள் (ஹென்றி ஸ்டீல் காம்மெஜர்) (1965-ஜோதி நிலையம்)

இசைத் துறை

இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்/ உசாத்துணைகள்

பொதுத் தமிழ் மேல்நிலை- முதலாம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் -2018

"https://tamilar.wiki/index.php?title=பெ._நா._அப்புசாமி&oldid=25903" இருந்து மீள்விக்கப்பட்டது