பெருஞ்சாத்தனார்
Jump to navigation
Jump to search
பெருஞ்சாத்தனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அவை குறுந்தொகை 263.
பாடல் தரும் செய்திகள்
“பேஎய்க் கொளீஇயள் இவள்”
தாய் தன் மகளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று வெறியாடச் செய்வாளாம். மகள் நோக்க சடங்குகளைச் செய்வாளாம்.
வெறியாட்டுச் சடங்குகள்
- மறியின் wikt:குரலை அறுப்பர்.
- அதன் குருதியில் தினையை நனைத்துவைத்துப் படைப்பர்.
- பேய்ப்பிடித்தவள் என்று பிரம்பால் அடிப்பர்.
- ஆற்றுக் கவலைக்கு அழைத்துச் செல்வர்.
- அப்போது பல இசைக்கருவிகள் முழக்கப்படும்.
- முருகனையும் வேறு பல தெய்வங்களையும் வாழ்த்துவர்.
அவன்
தலைவியின் மனத்திலிருக்கும் தெய்வம் மால்வரையில் மழை விளையாடும் நாடன். என்னதான் ஆட்டி வைத்தாலும் தலைவி தன் காதலனுக்குப் பிழை செய்யத் தெரியாதாம்.
தோழி
இப்படி வெறியாட்டு நடத்தப்போகிறார்கள். என்ன செய்யப்போகிறோம்? என்று தோழி காத்திருக்கும் தலைவன் காதில் விழுமாறு தலைவியிடம் சொல்கிறாள்.
பாடல்
மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக்கு அன்றே தோழி மால்வரை
மழை விளையாடு நாடனைப் போல்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.